July 26, 2015

2015 கவிதைகள் 1071 to 1080

என்
மெளன சிரிப்பில்
மெல்ல  மெல்ல
விரிகிறது
இந்த கவிதை பூ
வண்ணமாக
உன் கண்களின் ஒளியை
வீசிய படி
வாசனையாக
உன் உடலின்
வாசம் பேசிய படி....      1071

மனம்
உள்மனம்
ஆழ்மனம்
வெளிமனம்
என
ஒவ்வொன்றிலும்
உன் காதலின் மனம்
என்னுள்
நிறைந்துள்ளது....    1072

சிதறிய
கனவுகள் அனைத்தையும்
ஒன்று சேர்க்கிறேன்
உன் காதலின் வழியே
நாம் சேர்வதற்கான
ஒரு வழியும்
இல்லாத போதும்
அதன் வழியே
வெளியேற முயற்சிக்க
மட்டும் செய்வதில்லை....  1073

நீண்டதொரு
நிர்வாணத்தின் இடையே
என் குளியலறை
தேடினேன்
குளிப்பதற்கு பதில்
உன் பாடலின்
இசையை
கேட்டுக் கொண்டு
இருக்கிறேன்
எங்கிருந்து ஒலிக்கிறது
உன் குரல்
தேடத் தேட
அது என் மனமே!
என்று
என் மனம் இசைக்கிறது...   1074

எங்கிருந்தோ
நீ
கண் விழிக்கும்
அழகை
நான் இங்கிருந்து
பார்க்கிறேன்
ஆழக் கிணற்றில்
என் முகம் பார்த்த
சந்தோசத்தின்
குறியீடு போல....    1075

கண்களை மூடி
நீ வாசிக்கத் தொடங்கியதும்
என் கவிதை
ஆரம்பமாகிறது...  1076

எந்த
தனிமையும்
என்னை வாட்டியதில்லை
உன்னோடு அமர்ந்து
எழுந்த பிறகு...    1077

பறவைகள் அற்ற
அந்த வான்வெளியில்
நானும் ஒரு பறவையாக
உன்னை மட்டுமே
தேடிப் பறக்கிறேன்
நீல வண்ணங்களை
கடந்து
அந்த வானம்
இன்னும்
இன்னும்
நீண்ட போதும்...  1078

வெண்ணிற
வெள்ளியின் வெளிச்சத்தில்
பொன் நிறமென
வார்த்தைகளை
உனக்காய்
குவித்துக் கொண்டு
இருக்கிறேன்....   1079

அவசரமாய்
நீ இடும்
முத்தத்தில் தான்
ஆனந்தம் அதிகம்
அவசரமும் அதிகம்...  1080

No comments:

Post a Comment