தெளிவற்ற
என் மனதில்
தெளிவான நீரோடை நீ
உன்னுள் மூழ்கி
என் தனிமையை
தனித்துக் கொள்கிறேன்.... 1031
நீருக்குள் மூழ்கிய
நிலம் போல
எனக்குள்
உன் காதல்....... 1032
வாழ்வை நினைத்து
வாடவில்லை
வானவில் போல
எப்போதும்
என்னுள் நீ
ஒளி வீசுவதால்.... 1033
ஏன் இந்த
துயரம் என்பதை விட
துயரத்திலும்
உன் துணை இல்லாதது
தான்
எனக்கு வருத்தம்.... 1034
சூரியனே
காலையில்
கிழக்கு நோக்கியே
என் புடவை
மாற்றுகிறேன்
புன்னகை புரிந்த படி
நீ ரசிப்பதற்காக.... 1035
உன்னைக் காணாது
நான் இருக்கும்
விரதத்தின்
முடிவில்
என்னைக் கண்டு
உன் கண்களாலே
என் விரதத்தின்
பலனை
எனக்கு நீ கொடுப்பாய்!! 1036
பனி சூழும்
இந்த கடற்கரையில்
கடலின் இரவை ரசித்து
உன் கரம் தொட்டு
நானும் இசைக்க
வேண்டும்
கடலின் கீதத்தை விட
அழகான
ஒரு கீதத்தை.... 1037
திமிங்கிலத்தை விட
திமிராய்
நான் துள்ளி குதித் தாட
கடலாக நீ
எப்போதும் வேண்டும்
எனக்கு!!! 1038
தண்ணீரில்
மட்டுமே வாழும்
மீனைப் போல
உன்னிலும்
உன் காதலிலும்
வாழ்கிறேன் நான்.... 1039
தண்ணீர்
பெருக பெருக
நிறையும் குடம் போல
உன் காதல்
பெருக பெருக
நிறைகிறது
என் மனமும்
என் கனவும்.... 1040
No comments:
Post a Comment