July 26, 2015

2015 கவிதைகள் 1061 to 1070

அதிகம் பேசிய
கைவிரல்கள்
எல்லாம் இன்று
இன்னும் இன்னும்
அதிகமாய்
வார்த்தைகளை
தேடி எழுதுகிறது...         1061

உன் முகம்
பார்க்க முடியாத
கணமொன்றில்
கடல் நுரையை
வெறித்துப்
பார்த்துக் கொள்கிறேன்
மெல்ல மெல்ல
அதனோடு
இந்த மண்ணில்
நானும்
கலந்து கொள்ளமா
என்று!!!         1062

பிடிப்பின்றி
வாழும்
இவ்வாழ்க்கையில்
எனக்கு பிடித்த
ஒரே செயல்
உன்னைப் பற்றி
இப்பொழுது
எழுதிக் கொண்டு
இருப்பது மட்டும் தான்...   1063

மீண்டு வந்த
கவலையிலும்
காலம் இன்னும்
பலி வாங்குகிறது
உன் பார்வை கூட
என் மீது படாதவாறு...     1064

ஒவ்வொரு கனவிலும்
ஒவ்வொரு ஆசை
கூட தான் செய்கிறது...   1065

இறைவனைப் பற்றி
சிந்திக்கும் போது
உன்னை நினைத்துக்
கொள்கிறேன்
உன்னை பற்றி
சிந்திக்கும் போது
இறைவனை
நினைத்துக் கொள்கிறேன்
இப்போது சொல்
இறைவன் நீயோ!
அல்லது
நீயே இறைவனோ!!        1066

இந்த
போலியான உலகத்தில்
உருண்டு
புரண்டு
படுக்கும் போது
என் உயிர்கள்
உன்னை தேடி
என் கண்களின்
வழியே
பயணிக்கும்....       1067

உன் கண்களை 
காணாமல் 
என் மூளை 
நரம்புகள் எல்லாம்
உன் கவிதையின் 
பசியால் வாடுகிறது.... 1068

சிந்திக்கும் மூளையின் 
சிந்தனையில் நீ
சிந்தையின் வழியே 
ஒரு கண்ணீர் 
இது தான் 
இந்த முறை 
நீ தந்த கவியோ!!       1069

இடைவிடாது 
உன்னோடு பேசி 
உன்னோடு உறங்கி
தெளிய வேண்டும் 
காதலின் காலம்....    1070

No comments:

Post a Comment