நீ
இல்லாத போதும்
உன் நினைப்பும்
அது நிரப்பும்
உன் முத்தமும்
என்னை
அழ வைக்கத் தான்
செய்கிறது.... 1001
உன்னைப் பிரியும்
கணத்தில்
வார்த்தைக்கு பதில்
கண்ணீரே
வருகிறது காலத்தை
நினைத்து
வரும் கனவை
மறந்து.... 1002
ப்ரியத்தால்
மோதும் கண்களில்
காதலின் சத்தங்கள்
அதிகரிக்கிறது
இதயத்தின்
வழியே
ஆயிரம் ஆயிரமாய்
பூக்கள் பூக்கிறது... 1003
மலர்கின்ற மலரில்
மலரின் வாசம்
தீர்ந்து
உன் காதலின்
வாசம் வீசும்
நான் உன்னை
நினைத்து
அதை சுவாசிக்கும்
தருவாயில்.... 1004
உன் காதல் தரும்
சுகம்
ஒரு மலரை
போல
ஒவ்வொரு நொடியும்
என்னை
உன்னை நோக்கி
விரிவடைய செய்கிறது
என் அன்பே!! 1005
மலரில் பூக்கும்
புன்னகை நீ
மலராக என்றுமே
பூக்கிறது
நம் காதல்
உன்னில் என்னால்.... 1006
நீயாக மலர்கிறாய்
எனக்காய்
மலரை விட
அதன் தேன் சுவை
அதிகம்
உன் காதலை போல .. 1007
பல நிறங்கொண்ட
பூக்களை போல
தான்
பல பல
அன்பை அளிக்கிறது
உன் காதல்
என் காதல்
தோட்டத்தில் மட்டும்... 1008
தேன் சுரக்கும்
மலர்களுக்கு
மத்தியில்
எனக்காய்
நீர் சுரக்கும்
மலர் நீ..... 1009
வாசமும்
தேனுமாய்
என்னை மட்டுமே
சுமக்கும்
வெண்ணிற மலர் நீ!!! 1010
No comments:
Post a Comment