July 26, 2015

2015 கவிதைகள் 1041 to 1050

கமழும் பூக்களின்
நடுவே
உன் நாணத்தின்
வாசம் கண்டு
மயங்கி
மயக்கத்தின் முடிவில்
என்னையே பூவாக
சூட்டி விடுவேன்
உன் கூந்தலில்....      1041

உன் பிரிவின்
குறியீடு போல
விடியலின் பகல்
இப்போதே
நானும் நடுங்கியும்
ஒடிங்கியும்
கடக்கிறேன்
இந்த இரவை....     1042

எக் கவி
கொண்டு
நானும் செதுக்குவேன்
என் தேவதையின்
இதழை
இலைகளின் வாசம்
நுகர்ந்து
இலையில் கொடியில்
படரும் பூவின்
தேனை கொண்டு....  1043

என்னை நெகிழச்
செய்யும்
உன் பார்வை கொண்டு
நானும் கடந்து விட்டேன்
என் பாதி வாழ்க்கையை
இந்த இரவில் மட்டும்
இனி என்ன
பகல் நேர பயணம்
சொர்க்கம் தான்....     1044

உடல்கள்
உறங்கிக் கொள்ளட்டும்
உயிர்கள்
ஏங்கிக் கொள்ளட்டும்
உன்னை மட்டுமே
நான் நினைத்து
இந்த இரவும்
விடிந்து
கொள்ளட்டுமே! உன்னோடு.. 1046

எத்திசையில்
நான் சென்றாலும்
உன் காதலின் விசையால்
உன் இனிய
குரலின் இசையால்
என்னையே
கவர்ந்து விடுகிறாய்!!     1047

காதல் என்ற
என் இனிய குழந்தைக்கு
பிறந்த நாள் இன்று,
காதலுக்கும்
அவள் கண்களுக்கும்
என் இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்...         1048

மடி கொண்டு
என்னைத்
தாங்கிய தாயை
மறந்து
என் தாலிக் கயிறாக
உன்னையே
நேசிக்கிறேன்
என் அன்பே!!          1049

பசி என்று
அழுதேன்
ஒரு துளி பாலுக்காக
இப்பொழுது
வடிக்கிறேன்
ஒவ்வொரு துளியும்
உனக்காகவும்
உன் பசியை
தீர்ப்பதற்காகவும்..     1050

No comments:

Post a Comment