July 26, 2015

2015 கவிதைகள் 1051 to 1060

தொட்டிலுக்குள்
கிடப்பது சுகம்
என்று உணர்கிறேன்
என் கணவா!
உன்னையே தொட்டிலாக்கி
உன் காதலாய்
அதில் நான்
ஊஞ்சல் ஆடும் போது...  1051

நான் எப்பொழுதும்
விளையாட விரும்புவது
உன்னோடும்
உன் இதழோடும்
என் உயிரே!!         1052

"அ" என்ற
எழுத்தை அவள்
உச்சரிக்கும் போது
உன் அன்பே
அன்பாக
என் காதில் ஒலிக்கிறது..  1053

முன் இரவு
கனவை பற்றி
சிரித்துக் கொண்டு இருந்தேன்
பின் இரவு
என்ன கனவு
காண்பது என்று
சிந்தித்துக்
கொண்டு இருந்தேன்....    1054

என்
பட்டுப் பாவாடையில்
பதிந்த
வண்ணங்கள்
எல்லாம்
இப்பொழுது பிரதிபலிக்கிறது
கணவுகளில்
உன்னோடு
விளையாடும் போது கூட...  1055

சுவர்களை
பற்றிக் கொண்டு
நான் நடந்திருந்தால்
இப்பொழுது கூட
சுகம் தான்
உன்னையே
அந்த சுவற்றில்
சாய்த்து
முத்தமிடும் போது!
சிறு குழந்தையாக!!!     1056

எப்பொழுதும்
என்னுள்
தோன்றி பெருகுகிறது
என் இன்ப உலகம்
உன் பார்வையில் மட்டுமே!   1057

தனிமை கொண்டு
தாழிடப்பட்ட
இந்த அறையில்
உன்னை மட்டுமே
தேடிக் கொண்டு
இருக்கிறேன்

இருக்கிறேன்
இந்த அறையில்...    1058

சில நேர
பிராத்தனைகள்
ஏனோ!
இன்னும்
அதிகப் படுத்துகிறது
நம் பிரிவை!!           1059

அழ வேண்டும்
என்று
தோன்றும் கணமொன்றில்
மொத்தமாக
உன் நினைவை
கண்ணீராக
வழிய விட்டு விடுகிறேன்
அன்பே!!              1060

No comments:

Post a Comment