சுரந்து கொண்டே
இருக்கிறது
கண்ணீரின் வெப்பம்
வேதனை மிகுந்த
இந்த குளிர் இரவில்.... 2011
முழுமை நிறைந்த
கவிதையெல்லாம்
முழுமை பெறாத
நம் காதலை பற்றியும்
அதன்
கனவுகளை பற்றியுமே
நிறைந்து இருக்கிறது... 2012
அதிகாலை மழையை போல
ஆலயம் நிரம்பிய
விளக்குகளை போல
என்னுள் எப்பொழுதும்
விழுந்து ஒளிர்கிறது
உன் காதல்.... 2013
எதிலும்
உன் காதலின் நினைவு
எங்கோ
உன் பிரிவின் நினைவு என்று
என்னுள்
எப்போதும்
நிறைந்துள்ளது
எல்லா இரவும்... 2014
பயத்தில்
இறுக பிடித்த
தாயின்
கை விரலைப் போல தான்
உன் காதலை
இறுகப் பிடித்துக் கொண்டு
இருக்கிறது இதயம்
வாழ்வின் மீதான பயத்தில்... 2015
No comments:
Post a Comment