June 17, 2015

இறந்தவன்

இரவுக்கு முன்
இறந்தவன்
இரவில் வருகிறான்
தன் உடலை
தானே சுற்றி
வருகிறான்
யாரும் அழாத போதும்
தானே
தன் உடலை பார்த்து
அழுது கொள்கிறான்

இரவை
அவள் இனி எப்படி
கடப்பாள் என்று.....

No comments:

Post a Comment