August 7, 2015

2015 கவிதைகள் 1081 to 1090

உன் பாதத்தில்
ஓசை கண்டு
மெல்ல துடிக்கிறது
என் இதயம்
மெல்ல சிரிக்கிறது
என் இதழ்...        1081

என் தேகத்தின்
ஆசையாய்
எப்பொழுதும்
இருப்பது
உன் இதழ்...    1082

நறுமணம் வீசும்
கனவுக்குள்
காதலராய்
எப்பொழுதும்
பூக்கும் பூ
நாம் இருவரும்....    1083

ஓய்வின்றி
ஓடும் நதியில்
ஓய்வின்றி
பறக்கும் பறவையின்
நிழல்
நீ என்னுள்
நான் உன்னுள்....      1084

பல விசித்திரமான
கனவுகளில்
நான் உறங்கி
கழிக்கும் போது
அவ் விசித்திரங்களை மீறி
விம்மி அழுகிறேன்
உன்னோடு இல்லாத
அவ்விரவை நினைத்து..  1085

செல்வதற்கு
பாதைகள் உண்டு
என்னோடு
நடப்பதற்கு
உன் பாதம் மட்டுமே
இப்பொழுது இல்லை...    1086

முடிவுகள் அற்ற
என் கவிதையின்
இறுதி வார்த்தை
காதல் என்றால்
முதல் வார்த்தை
நீ...                                 1087

பூவே
உன்னில்
என்னவளின்
முகம் பார்த்தேன்
அவளின் முகத்தில்
உன் வாசம் கண்டு
நானும் மெல்ல சிரித்தேன்.. 1088

மழைக்கு
முன் தோன்றும்
வானவில் போல
நம் மழலைகளுக்கு முன்
நாம்-அன்பின்
வர்ணங்கள்....        1089

அதித பசியில்
அதிகமாய்
உண்டு கழித்த
உன் இதழ்
ஏனோ
பசியை இன்னும்
இன்னும்
கூட்டத்தான் செய்கிறது..    1090

No comments:

Post a Comment