அவன் தனிமையில் அந்த தெரு முனைக் கடையில் ஆழ்ந்த சிந்தனையுடன் புகைபிடித்த படி தன் கண்ணாடி வழியாக தன் காலிற்க்கு கீழே தெரியும் தரையை உற்று நோக்கி யோசித்து கொண்டு இருந்தான். அநேகமாக அடுத்து என்ன வேலை என்று கூட எண்ணிக் கொண்டு இருக்கலாம். புகை கூட கூட கையில் இருக்கும் சிகரெட் துண்டு எரிந்து தன் உடலை சுருக்கிக் கொண்டே இருந்தது. அவன் சிகரெட் துண்டில் இருந்து பிறந்த புகை மூட்டம் கூட கூட மேக மூட்டம் போல காட்சியளிக்க, மழை வந்துவிடுமோ? என்று எண்ணிய படி, தன் காலில் போட்டு நசுக்கியபடி, ஒரு சில நேரம் எச்சில் முழுங்கியபடி கிளம்பினான். எங்கே போகிறோம் என்று யோசித்து யோசித்து ஒரு வழியாக தன் வேலை செய்யும் இடத்திற்கு வந்தடைந்தான்.
"தும் க்யா கர் ரஹீ ஹோ?
என்று அவன் கேட்டான்.
"சார், நல் மேம் பானீ நஹீம் ஆதா."
என்றான் அந்த ஹிந்தி கார வேலை ஆள்.
"தோ கியா? பால்டீ மேம் பானீ ரக்கா ஹை".
என்றபடி வேலையாட்களை, வேலை எய்தபடி எண்ணிக் கொண்டு இருந்தான். இன்று தான் அந்த ஆங்கிலப் படம் வெளியாகிறதோ என்று. ஆம் அந்தப் படத்தின் பெயர் " Small Tiger". போக வேண்டும் என்ற எண்ணங்களும், விருப்பங்களும் இல்லை. ஆனாலும் ஒரு ஈர்ப்பு அந்தப் படத்தின் மீது. ஈவினிங் சோவிற்க்கு டிக்கெட் இருக்கிறதா? என்று மதியம் 3 மணி அளவில் தியேட்டர் பக்கம் போனான் அவன். அந்த இனிய நாளின் ஒரு அதிர்ஷ்டம் அவனுக்கு மிகச் சிறப்பாக கிடைத்தது. அது தான் அந்தப்படத்தின் லட்சுமிகரமான அந்த நடிகை அங்கே வந்திருப்பதை, பாரதி Style - ல சொல்லனும் -னா " இன்பத் தேன் வந்து பாயுதே காதினிலே" என்று அவன் அறிந்தான். அரை குறை மனது இல்லை இப்போது. மிக திடமான, திண்மமான ஒரு மனிதனாக அவன் உள்ளே சென்றான்.
அவளையும் பார்த்துவிட்டு, படம் பார்க்க ஆரம்பித்தான் அவன்.
"Small Tiger" படத்தின் ஓட்டம், நமது சிங்கத்தின் கர்ஜனையில், இன்னும் சொல்லப் போனால், வெறிகொண்டு, இன்னும் சொல்லப் போனால், வெகு கொண்டு, இன்னும் சொல்லப் போனால், கோபத்தில் பொங்கி எழுந்து, டிக்கெட் கிழித்துக் கொடுத்தவனிடமே டிக்கெட்டை கிழித்து எறிந்து கிளம்பியது தான் அன்றைய சிறப்பு அம்சம்.
வெளியேறிய அவன் மனம் வருந்தவில்லை, போனில் பைசாவும் அவ்வளவாக இல்லை, இருந்தாலும் இருக்கின்ற பைசா காலியாகும் வரை, அதாவது நாயகன் பானியில் " நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா" எதுவும்மே தப்பு இல்லை போன் செய்து புலம்பி தீர்த்த அருமையான அந்த ஒரு நாள். சிங்கத்தின் வாழ்வில் ஒரு முக்கியமான நாள்.
-SunMuga-
06-12-2013 22.33 PM
No comments:
Post a Comment