July 28, 2013

இறைவா!!

பூலோகம் தந்த இறைவா
பூவாக நான் மாற வேண்டும்
புதை மணலில் என்
உடல் இறுக வேண்டும்
புண்ணியம் பல செய்த
நீ எனக்காக இதையும்
செய்..
வாழ விருப்பம் இல்லை
என்னோடு நீ இருந்தும்
எதிரே நிற்கிறாய் நீ,
என்னுள் இருக்கிறாய் நீ,
இருந்தும் இறக்கவே
எண்ணுகிறது மனது.
உன் காலில் நான்
விழுகிறேன்,
உன் காதில் விழும்படி
தொழுகிறேன்.
என் உயிரை எடுத்துக்கொள்.
எந்த ஒரு வன்முறையும்
இல்லாமல்,
வாடும் பல முகம்
கோணமல் நீ
பார்த்துக்கொள்.
நான் வேண்டாதவையும்
நீ கொடுத்தாய்..
இப்போது வேண்டுகிறேன்
என் உயிரை பறித்து கொள்.
பயப்படாதே!!!!!
-SunMuga-
21-07-2013 23.33 PM

மானே!!

நாளும் நாம வாழ
வீடு ஒன்னு கட்டனும்,
அதுக்கு,
நாத்து ஒன்னு நட்டனும்,
பட்டணத்தில் நான்
இருந்து எட்டு நாளா
போகுது ஒரு வாரமா!!
இது என்ன நான்
வாங்கி வந்த வரமா?
ஏணி வச்சும் எட்டல,
நான்
சம்பாதிப்பதும் பத்தல,
பத்து மணின்னு
ஆரம்பிச்சு,
பதற்றத்தோடு நாள் போக,
நானும் எங்க போக..
உறவ நினைச்சு
நான் உருக,
உயிரை நினைச்சு
உறவு உருக,
நாளும் உருகுதே
என் மானே,
மாமன் நான் இருந்தும்
நனைஞ்ச தாளா
நீ இருக்க..
நானும் காத்து இருக்கேன்
நாத்தாக என் உடல் போக..
-SunMuga-
28-07-2013 18.40 PM

தேடல்

எல்லாம் அறிந்தவன் எவனும் இல்லை இந்த உலகில். அவரவர் அவருக்கான பாதையில் எதையோ தேடித்தான் செல்கிறார்கள்.
நானும் தேடித்தான்
செல்கிறேன் என்னவளின்
காதலை.
காற்று அடிக்கும்
திசை அறியாது,
நானும் செல்கிறேன்
இவள் காதல் காற்று
அடிக்கும் திசையை
நோக்கி...
என் காதலை இவள்
மீது திணிக்க
எண்ணம் இல்லை.
இவள் வேண்டியபடி
ஊட்டிவிட தான் ஆசை,
இவள் கூந்தல் ஏறி
உட்கார்ந்து கொள்ள
அந்த மல்லிகையாக
பிறக்க என்ன செய்ய
வேண்டுமென்று மண்ணை
தோண்டி அதன் விதையை
பார்த்தேன். நான்
கண்டது என் காதலின்
விதையைத் தான்.
பட்டுப் புடவையில்
புதைந்தவளுக்காக எத்தனை
பட்டுப் பூச்சி தன்
உயிரை தியாகம்
செய்துருக்கும்.
நாமும் தன் உயிரை
தியாகம் செய்ய
என்ன செய்ய வேண்டும்
என்று யோசித்து பார்த்தேன்.
ஆழ்ந்த சிந்தனைக்கு அப்புறம்
தான் தெரிந்தது, நான்
அவளோடு வாழ தான்
இத்தனை பட்டுப்பூச்சியும்
தம் உயிரை தியாகம்
செய்து இருக்கிறது என்று .
மணக்கும் மல்லிகை ,
மினுக்கும் பட்டுபுடவைன்னு அதிகாலையில் என்னை சுற்றி வந்தவளிடம் நான் கேட்டேன். ஏண்டி என்னையே சுத்தி வார..நான் எங்க சுத்துரேன் உன் காதல் தான் என்னை சுத்தவைக்கின்னு நீ சொல்லி, புடவை எப்படி இருக்குன்னு கேட்ட,"ம்ம்ம்" நல்லா தான் இருக்கு இன்னைக்கு தான் புடவை அழகா தெரியுதுன்னு நான் சொன்ன உடனே கனத்த சிரிப்போடு என்னை கட்டிப் பிடித்தாய் காலைப் பொழுது என்று கூட பாராமல்....
-SunMuga-
28-07-2013 18.06 PM

காதல் மை

அனைத்தும் புதிது
இங்கே,
உன்னை நேசித்த பின்
தான் உணர்கிறேன்,
மையிட்ட விழி,
என்னையே மையம்
கொள்கிறது,
மாயம் என்னவென்றால்
அது என்னையே
பார்க்கிறது..
ஒரு வேளை நான்
தான் அழகானவனோ?
சாத்தியம் இல்லையே!!
பின் ஏன் இந்த விழி
என்னை மையம்
கொண்டது..
ஓ!! இவள் பூசிக்கொண்டு
இருப்பது காதல் மையோ?
அதான் என்னையும்
கவர்ந்து, இழுத்து
கவிழ்த்து இருக்கிறது.
-SunMuga-
28-07-2013 17.44 PM

July 27, 2013

நிலா

என் நிலா உதிப்பதை
பார்க்க நான்
கண் விழித்து
காத்திருந்தேன் பகல்
பொழுதுகள் எல்லாம்,
பொழுது சாயும் நேரம்
தான் என் இனிய
பொழுதின் ஆரம்பம்,
இரண்டு அல்லது மூன்று
நிமிடத்தில் உதித்து
மறையும் இந்த நிலா,
ஒரு நாளும் என்னை
பார்த்தது இல்லை..
கனம் நேரம் கூட
உன்னோடு பேசியது
இல்லை,
காரணம் வேறு என்ன?
நீ கடந்து சென்ற
நொடியில் என்
கருவிழி போல
நானும் நின்று கொண்டு
தான் இருந்தேன்..
நீங்காத நினைவுகள்
நீ இல்லாமல் இல்லை..
உனக்கே தெரியாமல்..
-SunMuga-
27-07-2013 20.02 PM

இரண்டாம் அழகி

என் உலகத்தில் இவள் தான் இரண்டாம் அழகி. இவளின் அன்பிற்கும், ஆசைக்கும் அளவே இல்லை. அடம் பிடிப்பதில் இவளை அடுச்சுகிட ஆளே இல்லை. அதிகம் பேசுவா, எப்பவும் கண் கலங்கியே தான் இருப்பா.. ஏதாவது கேட்டுக்கிட்டே, அப்பா பொம்மை வேணும்ண்னு..அதுவும் பத்து பொம்மை வேணும் அப்படின்னு..விளையாட்டுத்தனமான பேச்சு,வேடிக்கையான விளையாட்டுன்னு இவ கூட காலம் போகுது. காரணமே இல்லாம கத்துரதம், இது வேணும், அது வேணும்ன்னு, அந்த இதுவும், அதுவும் எதுனே தெரியாம... இதுவும் ஒரு சின்ன சந்தோஷம் தான். உன் கூட பழகும் போது தான் எனக்கே தெரியுது நமக்கும் குழந்தை தனம் இருக்குன்னு..
காலைலே எந்துச்சதும் நீ உன் அம்மா காலடியை சுத்தி சுத்தி வருவதும் வாடிக்கையான ஒன்று. ஆமா, என் உதிரம் தானே உனக்குள்ளும் ஓடுது. அதான் அப்படி சுத்தி சுத்தி வர...
காலைலே சாப்பிடும் போது அப்பா அது என்ன? அப்பா இது? அப்படின்னு காய்கறி பெயரை கேட்டு கேட்டு தெரிச்சுக்கும் போது உன்னை விட உன் அம்மா தான் ரெம்ப சந்தோஷப்படுவா. ..
வித விதமான  ஆடை உடுத்தி அழகு பார்க்க ஆசை இல்லை. அழகாக என் மடியில் அமர வைத்து உன் அன்பின் ஆழம் பார்க்க வேண்டும். உனக்காக ன் அறிவை நான் பெருக்கி கொள்ள வேண்டும்.
நடைமுறை வாழ்வில் நானும் நடந்து சென்று கொண்டே இருக்கிறேன். நாளும் உன் புன்னகையை என் கண்ணில் சுமந்தபடி.
சீருடை அணிந்தபடி, சிறு ஒடை பள்ளிக்கு செல்லும் போதுஎன் கண்ணில் ஒரு பெருநீரோடை ஒடியது அந்தமுதல் நாளில். என்னமா சொல்லி குடுத்தாங்கா அப்படின்னு கேட்டபோது,யோசிக்காம நீ ஒண்ணுமே சொல்லிக் குடுக்கலன்னு...சொல்றத கேட்கும் போது எனக்கும் சிரிப்பு தான் வருது. சரி School -ல என்ன பன்ன அப்படின்னு கேட்கும் போது,
"விளையாண்டேன்"
"கொஞ்சம் போல எழுதுனேன்"
அப்புறம்
"சாப்டேன்"
"தண்ணி குடுச்சேன்"
அப்படின்னு நீ சொல்லும் போது என்ன சொல்றதுன்னே தெரியல.. அம்மா கதை சொல்லும்மா என்று நான்கு ஐந்து முறை கதை கேட்ட பின்னும் நீ கேட்கிறது என்ன ஒரு குறும்புத்தனம். அம்மா, அப்பாக்கு கதை சொல்லாத எனக்கு மட்டும் சொல்லுன்னு நீ கேட்கிறதும், நானும் கதையை கேட்டபடியே உன்ன பார்த்தால், ஏய்!! கதை கேட்காதன்னு சொல்றேன்ல... அப்படின்னு என்ன பார்த்து மிரட்டுரதும் என் வாழ்வின் ஒரு பொக்கிஷம் .
-SunMuga-
28-07-2013 11.45 PM

July 26, 2013

பள்ளி

எத்தனையோ நான் அள்ளிக் கொண்ட நினைவுகள் இந்த பள்ளிப் பருவத்தில். சத்துணவு முதல் பத்தாம் வகுப்பு சாயங்காலம் வரை என் நினைவின் ஒரு பகுதி. சத்துணவு போகும் போது ஒடி ஒழிந்து கொண்ட நொடிகள் இன்னும் ஒழிந்து கொண்டு தான் இருக்கிறது என் நெஞ்சுக்குள். அரை குறை படிப்பு ஆனாலும் அதில் ஒரு சந்தோஷம் இருந்திருக்ககூடும். அன்பை சுமந்த அம்மாவோடு சத்துணவு செல்லும் போது புத்தகப்பைக்கு பதிலாக அதிகம் கண்ணீரை சுமந்து இருப்பேன். நான் ஓடிய ஓட்டத்தை பார்த்து என் தாயிடம் இருந்து சிதறிய சிரிப்பொலி இன்னும் சத்தமிட்டுக் கொண்டே இருக்கிறது என் காதுகளில், முகத்தில் புன்னகையோடு. புழுதியில் புரண்டு எழுந்து புன்னகை பூக்க, ஒரு சின்ன பூவுடன் பலகை வண்டி ஓட்டியதும் ஒரு நினைவு. அந்த பூவின் முகம் இதுவரை என் கண்ணில் பட்டது இல்லை. ஆனால் அதன் வாசனையும் நினைவும் என் நெஞ்சில் ஒட்டிக்கொண்டுள்ளது. அ, ஆ படித்ததாக கூட என் நினைவில் இல்லை இன்று வரை.
ஆறாம் வகுப்பு என் தாயுடன் முதல் நாள் சென்றேன். அந்த நாள் இன்னும் என் கண்ணில் அப்படியே தெரிகிறது. வழி தெரியாமல் கேட்டு இறங்கி ஒரு வித மன பதற்றத்தோடு(சத்துணவு வாக இருந்தால் ஓடி விடலாம் இது ஆறாம் வகுப்பு ஆச்சே)சென்ற தினம்.
முதலில் நான் அமர்ந்த வகுப்பறை இன்னும் என் கன்னத்தில் அறைந்து கொண்டே இருக்கிறது. காலத்தின் சுவடுகள் என்னை இப்படி வாட்டி வதைக்கும் என்று ஒரு நாளும் எண்ணியது இல்லை. படிப்பறிவு இல்லை, பாதியில் விட்டு விடவும் மனமில்லை. நான் அமர்ந்த வகுப்பறை VI-D அந்த வகுப்பின் அறிவே இல்லாதவன் வரிசையில் நான் கடைசியாக நின்று இருப்பேன். எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் மண்டையில் ஏறவில்லை என்பதை விட அந்த அளவுக்கு விவரம் இல்லை.அந்த ஒரு வருடம் தான் என் வாழ்வின் பல விதிகளை மாற்றியது.முதலில் அடித்த ஆசிரியர் கூடபின் நாளில் அன்பு கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஓரளவு விவரம் தெரிய வந்தவுடன் நானே படிக்க தொடங்கினேன்.
பள்ளி - எனக்கு கனவுகளை காலம் தாழ்த்தி தான் வரவழைத்தது.ஆனால் அதில் ஆசைகள் பெருகிப் போயின.
பெண் என்ற பிம்பம் பின் தொடர ஆரம்பித்தது, அந்த பத்தாம் வகுப்பில் தான். யாரையும் காதலிக்கவில்லை. என்னோடு ஐந்தாம் வகுப்பு படித்தவள் இப்பொழுது பத்தாம் வகுப்பு முடித்துவிட்டாலே என்ற வெறி தான். என் மீதே எனக்கு கோபம் வர ஆரம்பித்தது. இனி கோபம் கொண்டு என்ன பயன் என்று என்னை நானே தேத்திக்கொண்டேன். படித்தேன் முடிந்தளவு. வெற்றியும் கொண்டேன் இயன்றளவு.
இன்று
வேதனை பல சுமந்தாலும்
வேண்டுமென்றா நான்
செய்தேன்?
என்ற ஒரே அர்த்தத்தில்
வாழ்கிறேன் நான்.
அன்று நான் சந்தித்த
நண்பர்கள் ஒருவர் கூட
இன்று என் கூட இல்லை.
காரணம் - அன்று இருந்த
நான் கூட இன்று இல்லை..
-SunMuga-
26-07-2013 23.35 PM

July 20, 2013

Love

காதல் என்பது
ஒன்றுமில்லை,
காதலிப்பவர்களுக்கு....
- Sun Muga-
13-08-2013 22.47 PM

July 18, 2013

பழனி பாபு

நீ எனக்கு ஒரு
நண்பன் இல்லை-
ஒரு நல்ல அன்பன்.

அன்பு என்பது
அளவு கடந்தது
என்பதை உன்னில்
நான் கண்டு இருக்கிறேன்.

வெறும் கல்லாக
இருந்த என்னை ஒரு
சில நேரம் ஆர
அமர்ந்து, உருண்டு ,
பிரண்டு செதுக்கி
இருக்கிறாய்..

நீ செதுக்கிய
அந்த கல் துகள்கள்
தான் பின் நாளில்
உதவும்..

இன்றோடு முடிவு
பெறுவதாக எண்ணுகிறது
மனது அரக்கோணம் வாழ்க்கை..

நீ இல்லாமல் தான்
என் வாழ்க்கை தொடங்கியது
இங்கு.. 

இன்று நீ இல்லாததாலே
முடிவுக்குவருகிறது.

என் வாழ்விற்க்கு
வழி கொடுத்தது
இந்த அரக்கோணம்,
அழியா இடம்
பெறுகிறது உன்னை
போன்ற அன்பர்களால்.

ஆயிரம் எண்ணங்கள்
தோன்றி மறைகிறது
இந்த பிரிவால்...

இனி கிடைக்காத
அந்த உறவால்..

நீ உடுத்திய உடைக்குள்
அடங்கிப் போன
உடலைப் போல,

கண்களை விரித்துப்
பார்த்தாலும்,
குறுகித் தான் தெரிகிறது
இந்த நிகழ்கால
வாழ்க்கை...

நிஜங்களை மட்டும்
நீ நம்பு,

நிம்மதி உனக்கு கூட,

நிலையானது உண்மை
என்ற வாழ்க்கை மட்டும் தான்...

நிதானமாக நீ பேசு,

அச்சப்பட நீ கூசு,

எப்பவும் போல..

உன் அகதிகளை நீ
அகற்று,
அகலமான வாழ்க்கை
உனக்கு அமைய...

ஆழமான சிந்தனை
உடையவன் நீ,
அதிகம் தேவையில்லை
என்று நினைக்கிறேன்.

இத்துடன் முடிக்கிறேன்..

-Sun Muga-
18-07-2013 23.44 PM

July 11, 2013

நீ பாடிய பாடல்

முதல் முறை ஒரு
பாடலின் வரிகள் என்
செவிகளில் ஒழிந்து
கொண்டுள்ளன..

நானும் கண்டுபிடித்துவிட்டேன்
அது யாரோ ஒருவனால்
எழுதப்பட்டது.

அவன் எழுதும் போது
கவிதையாக இருந்த
வரிகள் இன்று
நீ பாடிய போது
கவிதை மழையாக
பொழிகிறது என்
காதுகளில்..

காதல் என்றால் உனக்கும்
தெரிந்து தான் இருக்கிறது
அது அன்பின் ஒரு
முடிவு இல்லா ஒரு
தொடக்கம் என்று.

காதலை மையமிட்ட
பாடல் தான் அது.
ஆனால் நீ பாடிய போது தான்
எனக்கே தெரிந்தது, அதில்
அன்பு மையமிட்டு
இருக்கிறது என்று..

கதாநாயகியின் கண்ணில் உள்ள
காதல் உன் பாடல்
வரியில் மின்னுகிறது,

கதாநாயகனின் காதலின்
சந்தோஷம் உன் குரலில்
தெரிகிறது.

இரண்டையும் அழகாக
பிரித்துக் கொடுக்கிறது
உன் முக பாவனை.

பாடல் தானே அது
அதை ஏன் இவ்வளவு
உயிரைக் கொடுத்து
பாடுகிறாய்?

அதை உன் உயிர்
கேட்பதாலோ!!

உண்மையான வரிகள் தான்,

எதார்த்தம் நிறைந்த
வரிகள் தான்,

ஆனால் அத்தனையும்
உயிர் பெறுகிறது
நீ பாடும் போது..

நீ பாடிய பாடல்கள் ;

சொல்லிட்டாலே அவ காதலே
சொல்லும் போதே சுகம் தாளல..
-கும்கி-

போ நீ போ போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ!!!
-3-

-Sun Muga-
11-07-2013 21.45 PM

July 9, 2013

தொலைந்த தோழி

அன்பு சுந்தரிக்கு....

தோழியே!!!

நீ தான் என் முதல்
பெண் தோழி!!

என் கண்ணில் கவர்ந்த
பலருக்கு மத்தியில்
நீ மட்டும் ஒரு
பெண் தோழி!!

தொழில்நுட்ப கல்லூரியால்
தோழியாய் ஆனாய்,
தோழமை கொண்டாய்..

உடல் மொழியில் நீ
ஒரு பெண்,
உயிர் மொழியில் நீ
ஒரு ஆண் எனக்கு!!

பகிராத உணர்வுகள்
இல்லை,
உன்னோடு உணவு
உண்டதும் ஒரு ஞாபகம்!!

தோழி நீ!!

தோள் சாய முடியாத
தோழி நீ!!

நட்பு என்ற மாயம்
உன்னை சூழ,
நானும் அதில்
உன்னை சேர,
நித்தம் சிரிக்கிறேன்
அதன் நினைவுகளால்.

உன் பெண்மையை
உணராமல் நீ
என்னிடம் பழகுகிறாய்!!
அதனால் என்னவோ
நானும் பெண்ணாக உரு
மாறுகிறேன் உன்னிடம்..

உருமாறி உருகி உருகி
உன்னிடம் பேசியது
இல்லை,

ஒரு வார்த்தை பேசுவது
என்பதே மிக அரிது..

நீங்காத நினைவுகள்
உன்னை நினைவு படுத்தும்.
நீ மட்டும் எனக்கான
பெண் தோழி!!

என் விழியின் மொழியை
அதிகம் உணர்ந்தவள் நீ!!

உண்மையில் உன்னிடம்
பேசும் போது உண்மை
கூடி இருக்கும்.

உன்னதமான உறவு தான்..

உரிமையோடு நீ பழகி,
இன்று உயிரோடு
கலந்து இருக்கிறாய்!!

உன்னை அதிகம்
கிண்டல் செய்து
இருப்பேன்,
உனக்கு மட்டுமே
புரிந்தபடி,
அதுதான் நம் நட்பின்
முதற்படி..

பரிட்சையின் போது
பதட்டத்தோடு நான்
இருக்க,
சிரித்தபடி all the best
நீ சொல்ல,
நானும் சிரித்து இருக்கிறேன்..
(எனக்கு அல்ல,
உன் அருகே யார்
இருக்கிறார்களோ
அவர்களுக்கு..)

நானும் கவலை
கொண்டேன்,
பெண்ணாக பிறக்கவில்லையே
என்று உன்
தோழமை கிடைத்தபிறகு.

கஷ்டங்களை பல
கடந்திருந்தாலும்
இஷ்டம் போல்
உரையாடிய அந்த
நாட்களை மீண்டும்
ஒரு முறை
எண்ணிப்பார்க்கிறேன்..

இன்று உனக்கு பிறந்த நாள். உனக்காக நான் ஏதூம் இதுவரை
பரிசாக அளித்தது இல்லை. முதல் முறை அளிக்கிறேன் இந்த கவிதை பரிசை. ஆயிரம் வரிகள்  எழுதி இருப்பேன் முதல் முறை உன் நட்பை பற்றி எழுதும்போது ஒரு சிறு சந்தோஷம்.

உனக்கும் எனக்குமான ஒரு சிநேகிதம் பற்றி சொல்லனும்னா, ஒரு சின்ன உதாரணம் இருக்கு. படிக்கும் போது Class-ல First Mark நீ தான் எடுப்ப, ஆனா இது வரைக்கும் படிப்பு சம்பந்தமான எந்த ஒரு சந்தேகமும் கேட்டு உன் கிட்ட பேசுனதா சரித்திரம் இல்ல. அந்த அளவுக்கு அளவுக்கதிகமான ஒரு சிநேகிதம்.

-Sun Muga-
09-07-2013 02.00 AM

July 6, 2013

இளவரசன்

இளவரசனாக வாழவேண்டியவன்
தன் இல்லத்து அரசியின்
மீது உள்ள காதலால்
இந்த உலகை விட்டு
பிரிந்தான்.
காகிதத்தில் உன் சடலம்
கண்டேன்..
காயமும் கொண்டேன். ..
காதலின் வலியை
நானும் கொண்டதால்...
உன் உண்மை காதல்
ஊமையாக போனது
உலகம் உன்னை பற்றி
பேசும் போது கூட..
மாயம் கொண்ட காதலில்
மாண்டு போன நீயும்
ஒரு காதலன் தான்..
உன்னில் பிறந்த
காதலால் நீ
இறந்து போவாய்
என்று யாரும்
நினைத்தது இல்லை..