July 18, 2013

பழனி பாபு

நீ எனக்கு ஒரு
நண்பன் இல்லை-
ஒரு நல்ல அன்பன்.

அன்பு என்பது
அளவு கடந்தது
என்பதை உன்னில்
நான் கண்டு இருக்கிறேன்.

வெறும் கல்லாக
இருந்த என்னை ஒரு
சில நேரம் ஆர
அமர்ந்து, உருண்டு ,
பிரண்டு செதுக்கி
இருக்கிறாய்..

நீ செதுக்கிய
அந்த கல் துகள்கள்
தான் பின் நாளில்
உதவும்..

இன்றோடு முடிவு
பெறுவதாக எண்ணுகிறது
மனது அரக்கோணம் வாழ்க்கை..

நீ இல்லாமல் தான்
என் வாழ்க்கை தொடங்கியது
இங்கு.. 

இன்று நீ இல்லாததாலே
முடிவுக்குவருகிறது.

என் வாழ்விற்க்கு
வழி கொடுத்தது
இந்த அரக்கோணம்,
அழியா இடம்
பெறுகிறது உன்னை
போன்ற அன்பர்களால்.

ஆயிரம் எண்ணங்கள்
தோன்றி மறைகிறது
இந்த பிரிவால்...

இனி கிடைக்காத
அந்த உறவால்..

நீ உடுத்திய உடைக்குள்
அடங்கிப் போன
உடலைப் போல,

கண்களை விரித்துப்
பார்த்தாலும்,
குறுகித் தான் தெரிகிறது
இந்த நிகழ்கால
வாழ்க்கை...

நிஜங்களை மட்டும்
நீ நம்பு,

நிம்மதி உனக்கு கூட,

நிலையானது உண்மை
என்ற வாழ்க்கை மட்டும் தான்...

நிதானமாக நீ பேசு,

அச்சப்பட நீ கூசு,

எப்பவும் போல..

உன் அகதிகளை நீ
அகற்று,
அகலமான வாழ்க்கை
உனக்கு அமைய...

ஆழமான சிந்தனை
உடையவன் நீ,
அதிகம் தேவையில்லை
என்று நினைக்கிறேன்.

இத்துடன் முடிக்கிறேன்..

-Sun Muga-
18-07-2013 23.44 PM

No comments:

Post a Comment