July 28, 2013

தேடல்

எல்லாம் அறிந்தவன் எவனும் இல்லை இந்த உலகில். அவரவர் அவருக்கான பாதையில் எதையோ தேடித்தான் செல்கிறார்கள்.
நானும் தேடித்தான்
செல்கிறேன் என்னவளின்
காதலை.
காற்று அடிக்கும்
திசை அறியாது,
நானும் செல்கிறேன்
இவள் காதல் காற்று
அடிக்கும் திசையை
நோக்கி...
என் காதலை இவள்
மீது திணிக்க
எண்ணம் இல்லை.
இவள் வேண்டியபடி
ஊட்டிவிட தான் ஆசை,
இவள் கூந்தல் ஏறி
உட்கார்ந்து கொள்ள
அந்த மல்லிகையாக
பிறக்க என்ன செய்ய
வேண்டுமென்று மண்ணை
தோண்டி அதன் விதையை
பார்த்தேன். நான்
கண்டது என் காதலின்
விதையைத் தான்.
பட்டுப் புடவையில்
புதைந்தவளுக்காக எத்தனை
பட்டுப் பூச்சி தன்
உயிரை தியாகம்
செய்துருக்கும்.
நாமும் தன் உயிரை
தியாகம் செய்ய
என்ன செய்ய வேண்டும்
என்று யோசித்து பார்த்தேன்.
ஆழ்ந்த சிந்தனைக்கு அப்புறம்
தான் தெரிந்தது, நான்
அவளோடு வாழ தான்
இத்தனை பட்டுப்பூச்சியும்
தம் உயிரை தியாகம்
செய்து இருக்கிறது என்று .
மணக்கும் மல்லிகை ,
மினுக்கும் பட்டுபுடவைன்னு அதிகாலையில் என்னை சுற்றி வந்தவளிடம் நான் கேட்டேன். ஏண்டி என்னையே சுத்தி வார..நான் எங்க சுத்துரேன் உன் காதல் தான் என்னை சுத்தவைக்கின்னு நீ சொல்லி, புடவை எப்படி இருக்குன்னு கேட்ட,"ம்ம்ம்" நல்லா தான் இருக்கு இன்னைக்கு தான் புடவை அழகா தெரியுதுன்னு நான் சொன்ன உடனே கனத்த சிரிப்போடு என்னை கட்டிப் பிடித்தாய் காலைப் பொழுது என்று கூட பாராமல்....
-SunMuga-
28-07-2013 18.06 PM

No comments:

Post a Comment