தேநீர் நிரம்பிய
கோப்பையை கொண்டு
தேவதை பற்றிய சிந்தனை
வளர்த்துக் கொள்கிறேன்
எல்லா இரவுகளிலும்... 71
பிரிவைப் பற்றி
யோசிக்கும் போது
கவிதை வந்தடைகிறது
கண்களில்
வெறும் கண்ணீராக... 72
உன்னை நினைக்கும் போது
என்னை அடைகிறாய்
சில மெளனத்தின் வழியே
கண்களின் ஒளியாய்... 73
எல்லா இரவுகளிலும்
எல்லையற்ற
உன் நினைவுகள் தான்
என்னை உறங்க வைக்கிறது
ஏதோவொரு
நல்ல கவிதை எழுதிய பின்பு.. 74
பேசும் வார்த்தைகளை விட
பேசாத
உன் வார்த்தைகளின் ஒலியே
என்னை பேச வைக்கிறது
அதன் எதிரொலியாக... 75
என் உடலெங்கும்
உன் இதழின் வாசம்
என் இதழெங்கும்
தீராத
உன் இதயத்தின் நேசம்
அதனாலயே
இரவின் மீது
இனம் புரியாத
ஒரு பாசம்.... 76
உன் ரகசிய
புன்னகை போதும்
வெளிப்படையாய்
நான்
உன்னை முத்தமிட... 77
தீராத
உன் வலியைப் பற்றிய
நிமிடங்களை
நினைத்துப் பார்க்கிறேன்
மூன்று நாட்களை கடந்தும்
எனக்கும் வலிக்கிறது.. 78
உறக்கம் வராத
இரவுகளில் ஏனோ
உன்னை அதிகம்
அணைத்தப்படி
உறங்க முற்படுகிறேன்
விழி திறந்த
கனவுகளின் வழி!! 79
பாதைகள் இருந்தும்
நம் பாதங்கள் இணைந்தும்
உன்னோடு
நடக்க முடியவில்லையே
உன்னோடு கைகோர்த்து.. 80
No comments:
Post a Comment