கவிதை
வார்த்தைகளின் இடையே
உன் கை விரல் பிடித்து
அலையவே
நானும்
வெறி பிடித்து அலைகிறேன்
கவிதையின் வார்த்தைகளை தேடி... 731
சுற்றித்திரியும்
இந்த இரவுக்
காற்றின் வழியே
சுதந்திரமாய்
நானும் அடைவேன்
உன் காலடியை
உன் அறையின் வழி.... 732
சலனம்
நிரம்பிய சங்கதியை
சொல்லுகிறது
என் அந்தி நேர கண்கள்.. 733
பெளர்ணமி
நிலவை பார்த்து
உன் கண்களோடு
என் கண்கள்
பேசிக் கொண்டு இருக்கிறது
கண்ணீரின் வழியே!! 734
மஞ்சனையும்
மாரியின் முகமாக
மாறியது
நெஞ்சம் முழுதும்
நம் காதலின்
முகம் கூடியது..... 735
ஊர் கூடி
கொண்டாடும் திருவிழாவில்
நான் உன் நினைவால்
உன்னையே தேடிக்
கொண்டு இருக்கிறேன்... 736
தொட்டு வணங்கிய
கடவுளிடம்
கண்ணீர் விட்டு
கேட்க முடியவில்லை
கண்ணீரும் தீர்ந்து விட்டதோ? 737
உன்னை
நான் நினைக்கும் போது
என்னை
நீ உன் நினைவால்
அனைத்துக் கொள்கிறாய்... 738
விக்கல் வரும் போது
யார் என்று கேட்கும்
உன் அம்மாவிற்கு
என்னை நினைத்து
உன் சிரிப்பிலே
பதில் சொல்லிவிடுவாயோ!! 739
சாத்தியங்கள்
இல்லாத போதும்
என் கண்கள்
உன் கண்களை
சந்திக்கிறது
ஒவ்வொரு கவிதையின் வழியே!! 740
No comments:
Post a Comment