புடவை
உனக்கு ஓர் அழகு தான்!
அழகான புடவையும் அழகு
என் கையில்
நீ புடவையில்
தவழும் போது.... 791
உன் புன்னகையில்
உதிர்கிறது
உன் புடவையின்
பூக்கள் என் கைகளில்... 792
எப்படியேனும்
நானும் சூடிவிடுவேன்
உன் கூந்தலில்
என் காதல் பூவை
இந்த இரவுக்குள்.. 793
இடைவிடாது
பெய்யும் மழையில்
நானும் கொஞ்சம்
வெட்கப்படுவேன்
குளிரில் உன்னோடு
நான் நடுங்கும் போது... 794
உன்
நடையின் போது
உன் இடையை தேடுகிறது
என் இதழ்
நம் வீட்டினில்.... 795
பூட்டிய வீட்டை
திறந்தவுடன்
விடை கொடு
பூட்டிய உன் வெட்கத்திற்கு.. 796
புத்தகம்
நான் படித்தால்
நீ
என் இதழை படிக்கிறாய்... 797
அர்த்தம் தான் என்ன?
என்று ஏதோவொரு
வார்த்தையின்
அர்த்தம் தேடி
என்னையே உன்னுள்
அடக்கி விடுகிறாய்
அர்த்தத்தின் விடையாய்... 798
அதிகாலை வரை
நானும் தொடர்வேன்
உன்னோடு ஒர்
பயணத்தை
உன்னையும்
உன் இதழையும்
தொட்டுக்கொண்டு.... 799
ஏன்
என்னை தொடுகிறாய்
என்று
என்னைத் தொட்டு
நீ கேட்கும் போது தான்
தெரிகிறது உன்
தொடுதலில்
இத்தனை ஸ்பரிசம்
இருக்கும் என்று... 800
No comments:
Post a Comment