உன்னோடு
நான் ரசிக்கும் மழை
அந்தி நேர
உன் முத்த மழை.... 831
வெட்கத்தில்
நீ ஓடினால்
பக்கத்தில் நீ வரும் படியான
ஒரு பறக்கும் முத்தத்தை
நீ ஓடிய பாதை வழியே
நானும் பறக்க விடுவேன்... 832
உன்னைக் கான
வரும் வழிகளில் எல்லாம்
பல வாகனங்கள்
என்னையும் கடக்கிறது
நானும் கடக்கிறேன்
ஆனால்
நம்மைப் பற்றிய பிரிவு
மட்டும் மனதில்
இருந்து கடப்பதில்லை... 833
என் விழி கொண்டு
நான் வரையும்
ஒவியத்திற்க்கு
உன் இதழின் வண்ணம்
எப்போதும் மின்னுகிறது.. 834
உன் உடலின் ஆழத்தில்
என் காமம் புதைத்து
நம் காதல் முளைக்கிறது... 835
விழி தரும் புன்னகையில்
விடிந்தாலும் தீராத
காதல்
விடிந்த பின்னும் தீராத
காமம்
நம்முள்ளே வாங்கி
குவிக்கிறது முத்தமும்
புன்னகையும்..... 836
உறங்கும் போது
என்றும்
நீ உடுத்தும் புடவை
நானாகவே இருக்க வேண்டும்.. 837
உன்னோடு இருப்பது
ஒரு சுகம்
உன்னோடு மட்டும்
நாட்களை கடப்பதும்
ஒரு சுகம்
உன்னோடு மட்டும்
இந்த இரவை
பருகுவது
சுகத்திலும் இதம்.... 838
இவ்விரவு தேய
இவ்விதழுக்கு
உன் இதழ் தேவை..... 839
நான் எப்போதும்
நானாக இருப்பதில்லை
நீ என்னோடு
இருக்கும் போதும்
உன் நினைவு என்னோடு
பேசும் போதும்..... 840
No comments:
Post a Comment