ஒற்றை
இரவு போதும்
வானின் நிலவையும்
இருளின் நட்சத்திரத்தையும்
நாம் இருவரும்
சேர்ந்து ரசிக்க..... 751
எல்லைகள் அற்ற
இந்த காதல் உலகத்தில்
நீயும்
நானுமாய்
சேர்ந்து வசித்துக் கொள்ள
ஒரு வீடும்
ஒரு காலமும்
இல்லையென்பதே
உண்மை!! 752
சங்கீத குரலில்
என்னை நீ
நெருங்கும் போது
என் சகல
சங்கதிகளையும்
வெளியேற்றி விடுகிறாய்! 753
மகிழ்வாய்
நான் துயில
என் குயிலின் ஓசை
ஒலிக்க வேண்டும்
அதிகாலையிலும்.... 754
மனம் அனுமதித்தால்
காலம் சம்மதிப்பதில்லை
காலம் சம்மதித்தால்
மனம் அனுமதிப்பதில்லை... 755
அலங்கரித்து
நான் நின்றால் கூட
அமைதி காக்கிறாய்
எத்தகைய பொறுமை உனக்கு?
போதும்
உன் பொறுமையோடு
களைத்து விடு
என் அலங்காரத்தையும்... 756
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் இன்னும்
நீ இளமையாகவே
இருக்கப் போகிறாய்
என் கவிதையின் வழி.... 757
சில நேரம்
மெளனத்தாலே
என்னை
நீ உடைத்து விடுகிறாய்... 758
கொடிய இருளும்
அகன்ற அகல் விளக்கும்
வழுகும் எண்ணையும் அற்ற
தீபம்- உன் கண்கள்.... 759
காலத்தை
வீணடிப்பதில்
எந்தவொரு பொருளும் இல்லை
இருந்தும் வீணடிக்கிறோம்
காலத்தோடு காதலையும்... 760
No comments:
Post a Comment