நான் கட்டிய பூவில்
என் காதல் வைத்தேன்
நீ பூட்டிய வெட்கத்தை
உடைக்கும் படியான
வாசத்தை சேர்த்தேன்.. 851
இரவின் வாசம்
கூட்டிய பூக்கள் எல்லாம்
பகலின் நேசம் கூட்டுகிறது.. 852
இவ்விரவை
உன்னோடு நடந்து
நான் கழிக்க வேண்டும்... 853
கனவில் உன்னை
நினைக்கும் போதே
இத்தனை கிறக்கம்
என்றால் நினைவில்?? 854
நீ செல்லும் இடமெல்லாம்
என் முத்தத்தை
நட்டு வைப்பேன்
அது
உன் முகத்தில்
புன்னகையாக மலர.... 855
உன் காதல் அருவியில்
ஒரு சிறு துளி தான்
என் முத்தமும்
நான் மொத்தமும்... 856
இரவு தீரும் வரை
மெளனமாய்
உன்னோடு பேசிக் கொண்டு
இருக்கிறேன்
மெளனத்தில் தான்
எத்தனை வார்த்தைகளை
உதிர்க்கிறது உன் கண்கள்.. 857
மரணம் வேண்டும்
உன்னை மனனம்
செய்யும் ஆற்றல்
என்னிலே குறையும் போது.. 858
சூரியனே
வா!
பனித்துளியாய்
நான் உன்னில் கரைய!! 859
காகிதத்தில்
நான் நிரப்பிய
என் காதலெல்லாம்
என்னை காலமெல்லாம்
நினைக்க வைக்கும்
உன்னை வரும் காலமெல்லாம்
காண நினைக்கும்... 860
No comments:
Post a Comment