உன் கண்களோடு
உன் காதலும்
இல்லாமல்
என்னால் ஒரு கவிதை
கூட எழுதி விட முடியாது... 741
என்னோடு
எல்லாம் தெரியும்
மனிதர்கள் இருக்கலாம்
எனக்கு
உன்னை மட்டுமே
தெரியும் எல்லாவுமாக! 742
எதிர் பாரா
கணங்களில்
வழியும் கண்ணீரின்
சோகம் உன் பிரிவு... 743
தனி அறை
தேடி அலையும்
என் கண்கள்
உன்னை நினைத்து
ஒரு நிமிடமேனும்
அழுது கொள்ள.... 744
காலம்
நித்தம் சொல்ல மறுக்கிறது
நம் காதலின்
ரகசியத்தை நம்மிடமே!! 745
சொல்ல வேண்டிய
வார்த்தைகள்
சொல்லாமல் போனதால்
நம்மிடம்
சொல்லாமலே போகிறது
காதல் காலம்... 746
வெளி சூழும்
இருள்கள் எல்லாம்
இன்னும் இன்னும்
ஒளியைக் கூட்டிக் கொண்டு
இருக்கிறது என் கவிதைகளுக்கு..... 747
நிகழ்ந்து விட்ட
நிகழ்வுகள் எல்லாம்
நின்று பேசுகிறது
என் கண்களில் .... 748
உன்னை அன்பை
நினைத்து
அனைத்துக் கொள்ள
தோன்றும் போதெல்லாம்
அழுது விடுகிறேன்
ஏன்
அழுகையின் வழியே
உன்னை
அனைத்துக் கொள்வதற்காக தான்.... 749
என் மெளனத்தின் வழியே
உன் நினைவுகளின்
ஓசை
எனக்கு மட்டுமே கேட்கிறது.... 750
No comments:
Post a Comment