உளரல் மிகுந்த
என் கவிதைகள்
எல்லாம்
உள்ளம் நிறைந்த
காதல் கவிதையாக
மாற்றுகிறது
உன் கண்கள்.... 761
தென்றலின்
தீண்டலில்
நான் உன்னை தேடும் போது
தென்றலாகவே
நீ
என் இதழில் முத்தமிடுகிறாய்... 762
தேன் ஒழுகும்
நிலவின் கீழ்
நான் தேடும்
தேகமோ? நீ
இல்லை
தேவதை நீ!! 763
என் வீட்டு
ஜன்னலின் வழியே
என் காதலை
அனுப்புகிறேன்
பல வீதிகளை கடந்து
அவை
உன் இதயத்தில் முத்தமிட.... 764
நீ இல்லாத போது
உன் வீட்டை
நான் கடக்கும் நொடிகளில்
உன் வீட்டின்
படிகளில் அமர்ந்து செல்கிறது
என் கண்கள்
உன் பாத ரேகையை
பார்த்த படி!!!! 765
ஒரு போதும்
திரும்பி விட தோன்றியது
இல்லை
உன்னை விட்டும்
உன் பார்வைகளை விட்டும்... 766
என் முகம்
தேடும்
உன் மார்புக் குழியில்
நானும் எழுதிவிடவா ?
ஒரு காதல் கவிதை.. 767
என்றேனும்
உன் முகத்தோடு
என் முகத்தை
ஒட்டி பார்த்து விட வேண்டும்... 768
உன் இடை
கிள்ளி
உன்னையே அள்ளி
அனைத்திட
ஒரு சமையல் அறை
வேண்டும்... 769
உன் நாடியின்
நரம்பின் வழி
உன் மார்பில்
நான்
மெல்ல மெல்ல
புதைய வேண்டும்.... 770
No comments:
Post a Comment