June 1, 2015

2015 கவிதைகள் 861 to 870

இரவுக்கும்
உனக்கும் என்ன வித்தியாசம்
இரவு அழகு
நீ பேரழகு இரவில்...   861

உன் உடைகளை
உடுத்திக் கொள்
மறக்காமல்
மறுக்காமல்
என்னையே உடையாக!!   862

உன்னுடனான
கிறக்கத்தில்
என் உறக்கம் குறையும்
உயிராய்
என் காதல் பெருகும்..   863

விழி மூடிய போதும்
எப்படியும்
கண்டுபிடித்து விடுகிறது
என் இதழ்
உன் இதழை....     864

வழியெங்கும்
புன்னகையில்
உன்னை இணைத்து
வழிகளில் நானும்
மறந்தேன் போக
வேண்டிய வழிகளை...  865

காமம் தந்த
காயத்திற்கு
காதல் எப்போதும்
ஓர் மருந்து...      866

மெல்ல மெல்ல
காற்றில் அசையும்
பச்சை வண்ண
இலைகளை போல
நீயும் அசைக்கிறாய்
உன் முகத்தை
வெட்கத்தில் ....     867

உன் இதழ் தேடி
படரும் கொடி
தான் என் இதழ்...  868

இன்பங்கள்
இரவுக்கு சொந்தம்
இரவில் நீ
எனக்கு சொந்தம்...   869

சின்ன சின்ன
மெழுகுவர்த்தியின்
வெளிச்சம் கூட்டி
வெட்கத்தை குறைத்து
விடுகிறாயே என் அன்பே!!  870

No comments:

Post a Comment