என் ஆழ்ந்த
உறக்கத்தின் இடையே
உன்னை அழைக்கிறேன்
கனவினில்
உறவாட
உரையாட
உறங்கும் என்னை
உறங்கிய என்னை
உன்னை கொண்டே
உறங்க வைக்கிறேன்
என் காதலியே! 521
அதிக சுகம்
தராத இக் கனவை
நான் நிராகரிக்கிறேன்
மீண்டும்
உறங்கி உறங்கி
உன் முத்தத்தை
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
என் படுக்கையறையில்... 522
பாதி உறக்கத்தில்
என்னை கட்டிப் பிடித்துக்
கொள்கிறாய்
மீதி உறக்கத்தில்
நான் உன்னை
கட்டிப் பிடித்துக்
கொள்கிறேன் காலை வரை.. 523
பாதையை
தேடி ஓடும்
ஓர் நதியினைப் போல
உன் பாதம்
தேடி ஓடுகிறது
என் கனவு... 524
அதிகாலையில்
கொஞ்சிப் பேசும்
உன் கொலுசின் ஒலியில்
நானும்
கெஞ்சிக் கேட்பேன்
இன்னும்
ஓர் முத்தம்
நீ குளிப்பதற்கு முன்னால்... 525
நம் காதல்
குடையை
மடக்கி விடுகிறாய்
இரவின் முத்த மழையில்... 526
சிட்டுக்குருவியை விட
வேகமாய் பறந்து
விடுகிறாய் வெட்கத்தில்
சின்னதாய்
என் கன்னத்தில்
ஒர் முத்தமிட்டு... 527
உன் கண்களை
எதிர் பார்த்து
காத்திருக்கிறது
என் " காதல் கவிதை" 528
இக் கண்கள்
உன் கண்களை
தேடுகிறது,
இவ்விதழ்
உன் இதழை
நாடுகிறது,
இவ்வுடல்
உன் உடலோடு
உறவாடுகிறது
இருந்தும்
இக் கண்களின்
வழியே
வழிகிறது
இக் கண்ணீர் துளி
உன் பிரிவில்... 529
இக் கண்களின்
வழியே
கனவில் நான்
உன்னை துரத்துகிறேன்
காதலின் இடத்தை
நீ அடைந்ததும்
திமிராய் என்னைப்
பார்த்து சிரிக்கிறாய்
நான் இப்போது
வெட்கப்பட்டு உன்
அருகே அமர்கிறேன்,
கனவில் நான்
கண்ட
கண்களை கொண்டே
உன் காதலை
எனக்கு அளிக்கிறாய்
மிக அமைதியாய்
மிக அமைதியான
இந்த இடத்தில்
ஆடம்பர முத்தம்
ஆரம்பிக்கப்பட்டது உன்னால்... 530