பனி உலர்த்திய
உன் இதழை
நான் இப்போதும்
நினைக்கிறேன்
அதோடு
என் இதழையும்
இணைக்கிறேன்... 391
சந்தோச தனிமையில்
நான் அமர்ந்தால்
நீயும் அமர்ந்து
கொள்கிறாய்
உன் அனைத்து
துயரத்தையும் மறந்து... 392
முத்தமிட்ட திமிருடன்
நான் பார்த்தால்
மீண்டும் முத்தமிடு
என்கிறாய் திமிருடன்.... 393
அசதியற்று அலைகிறேன்
உன்னோடு
நான் கழித்த காம
இரவிலும் கனவில்.... 394
காத்திருந்தேன்
உன் முத்தம் முடியும் வரை
பின் நானே
உன்னை தொடர்ந்து வந்தேன்.. 395
நடந்திராத
அந்நிகழ்வு நடந்து
இருக்க வேண்டும்
இரவிலும் பகலிலும்
நான் உன் பாத
விரலோடு
கலந்து இருக்க
வேண்டும்.. 396
நிஜத்தில் இருப்பதை
நிஜமாகவே
நான் இப்போது
மறந்து விட்டேன்
நிஜமாகவே நீ
என்னோடு இருப்பதால்.. 397
கருமேகமாக
உன் காதல் மூடும்
சூரியன் நான்.... 398
உன்னுடனான
பழைய கனவை
புதிய கனவோடு
இணைத்து விடுகிறேன்
இன்னும் உன்
அணைப்பு அதிகமாக
இருக்க...... 399
மாய உலகில்
உன்னோடு உறங்கிக்
கொள்ள ஓர் ஆசை
கனவின் உலகில்
உன் காதலின்
கால்களோடு ஓடி
விட ஆசை
இன்னும் ஒர்
மாய உலகிற்கு.. 400
No comments:
Post a Comment