March 15, 2015

2015 கவிதைகள் 471 to 480

கூர்மையாய்
பார்க்கிறேன்
கொழுந்து விட்டு
எரியும் அந் நெருப்பை
உன்னை நெருங்கிய
அந்தக் கனல்
மிகுந்த கணங்களை
நினைத்தப் படி...            471

நெருக்கத்திற்கு முன்
எரிந்த காதல் தீ
நெருக்கத்தின் பின்
குளிர்ந்தது...              472

ஏன் குளிர்கிறது
அன்பே
இந்த "காதல் தீ"....   473

காரணமாய் தான்
ஏற்றி வைத்தாய்
மெழுகுவர்த்தியை
என் இதழை மட்டுமே
நீ மேய்வதற்கு..          474

குளித்து முடித்த
கையோடு
குளிர் காய்கிறாய்
என் இதழ் தீயில்...    475

உன்னையும்
உன் கண்ணையும்
பார்த்த உடனே
பற்றி விடுகிறது
ஒர் காதல்
கலந்த "காமத் தீ"       476

காம வெளிச்சத்தை
காதலால்
குறைத்துக் கொள்
முத்தத்தால்
நிரப்பிக் கொள்
இந்த
இரவு அறையில்...       477

வேண்டாத
இடங்களில் கூட
முத்தமிட
வேண்டுகிறாய்
வேண்டுமென்றே
நானும் இடுகிறேன்
வேண்டாத
இடங்களில் கூட....      478

வழிந்தோடும்
என்
முத்தங்களை
ஓர் இடத்தில்
நிறுத்தி வைக்கிறேன்
மகிழ்ச்சியோடு
நீ
ருசிப்பதற்கும்
ரசிப்பதற்கும்.....          479

நீ இடும்
முத்தத்தை
கணக்கீட்டு கொள்கிறேன்
என் மறு
முத்தத்தின் வழியே..    480

No comments:

Post a Comment