கருமேகம்
நிரம்பிய வானம்
முத்தமாக
ஓர் மழைத்துளி
என் உடலில் விழுகிறது
உடையை மீறி... 411
விம்மியழுத
நிமிடங்களை நினைத்தால்
சிரிப்பு தான் வருகிறது
அவ்வளவு ஆழமாகவா?
உன்னை காதலித்து விட்டேன்
என்று.... 412
உன் முத்த
இடுக்குகளில்
நானும் இழைப்பாரிக்
கொள்கிறேன்
இந்த உலகத்தின்
ஏதோவொரு மூலையில்
நான் இருப்பதற்கும்
நான் வசிப்பதற்கும்... 413
வடியும் ரத்தம்
காயத்தை உணர்த்தும்
வடியும் கண்ணீர்
உன் காதலை உயர்த்தும்.. 414
தனிமையில்
இருந்து தவித்தேன்
இப்போது தனிமையையே
தவிர்க்கிறேன்
உன் நினைவோடு
மட்டும் நான் வாழ.. 415
சூழும் வெற்றிடத்தில்
உன் முத்தத்தை
நிரப்பி வைக்கிறேன்
முதல் முறை
முத்தத்தையும்
எதிர் பார்க்கிறேன்.. 416
மெல்லிடையை
காட்டும் மேலாடை
நீ உடுத்தும் போது
சொல்லில் ஏதும்
இடையூறு இல்லை
என் கவியில்.... 417
அன்பும்
அணைப்பும் பெருகி
அந்தி நேர முத்தம் சொருகி
ஆதி காதலும் பெருகி
துன்பம் கரைந்து
இன்பம் பெருகும்
இவ் வாழ்க்கை
உன்னோடு நித்தம் பெருக
வேண்டும்.... 418
புதுப் பூக்கள்
பூக்கும் இந்த
பூந்தோட்டத்தில்
நானும் பறிக்கிறேன்
உன் காதல் பூவை.... 419
பாவை முகம்
பார்த்து வளரும்
பூவை பார்த்தால்
காதல் பிறக்கும்
மல்லிகை பூ
என்றால்
காமமும் இனிக்கும்... 420
No comments:
Post a Comment