மெளமான மழையில்
மெளமான உன் முத்தம்
மெளனம் நிறைந்த
இவ்விரவில்
மெளனமாய் நான்
ரசிக்கிறேன்
ருசிக்கிறேன்
புசிக்கிறேன்... 451
இரவின் மெளன
மொழியுடன்
உன்னோடு பேசிக்
கொண்டு இருக்கிறேன்
மிகவும் மெளனமாக.... 452
மெளனம் நிறைந்த
இவ் அறையில்
என் தனிமையின்
மரண ஓலம்
ஓசைகள் இன்றி
நீ பேசும் போது கூட... 453
என் தனிமையை
நீக்கிக் கொள்ள
எவ்வழியும் இல்லை
என்று தான்
நினைத்துக் கொண்டு
இருந்தேன்
உன் இதழால்
நீ முத்தமிடும் வரை... 454
அறையில் இருக்கும்
அத்தனை ஜன்னலையும்
இறுக சாத்திவிட்டு
இறுக்கமாக நீ
அனைத்த அந்நொடி
என் அத்தனை
சந்தோச ஜன்னலையும்
திறக்கிறது... 455
உன் கால்
விரலின் ரேகை கூட
பதிந்து
புதைந்து
கிடப்பது எத்தனை
பாக்கியம்
என் இதழில்... 456
தூக்கம்
கலையாத கண்களில்
ஏனோ
இரவின் ஏக்கங்களே
நிறைந்துள்ளது.. 457
விலகிய வெளிச்சம்
நெருங்கிய முத்தம்
அது தான்
இரவின் சித்தம்... 458
ஏன் நினைத்தாய்
என்னை
இப்போது பார்
என் இதழ் சுடுகிறது
வா!
கனவிலாவது வந்து
குளிர்வித்துப் போ!! 459
நீர் போன
பாதைகள்
ஆறுகளாக மாறும்
நீ போன
பாதைகள்
என்
காதலாக மாறும்... 460
No comments:
Post a Comment