அடம் பிடித்துக்
கொள்கிறாய்
அடை மழையின்
முடிவில்
என் அணைப்புக்கு
நடுவில்
மீண்டும் ஒர்
மழை வேண்டுமென... 481
சிறகை நாடும்
இறகைப் போல
உன் இதழை
தேடும்
என் இதயம்... 482
வெளிச்சங்கள்
வெளியேறாமல்
வெப்பங்கள்
அதிகமாகமல்
இன்னும்
அதிகமாய்
எரிகிறது
நம் "காதல் தீ" 483
முந்தைய
நிமிடத்தில் இருந்து
பிந்தைய
நிமிடம் இன்னும்
ஆழமாகிறது
ரகசிய முத்தத்தால்... 484
இமைகளை
திறந்து மூடி
மீண்டும்
இமைகளை
திறந்து
நீ மூடினால்
ஏனோ
காதல்
இதழ்களை
மூடிக் கொள்கிறது.. 485
வேகமற்ற
இரவில்
மோகத்தோடு
இதழ் தழுவும் போது
மெதுவாய் ஓர்
கனவு
நதியில் நீ
நிர்வாணமாய் நான்
முழ்கி எழுந்ததும்
கலைந்தது
நீ
கனவோடு
என்னை கட்டி அணைத்தபடி
விடிந்தது இரவு... 486
எத்தனை முறை
கொடுத்துக் கொண்டாலும்
எடுத்துக் கொண்டாலும்
முத்தம்
இன்னும்
முத்தமாகவே இருக்கிறது
என் மொத்த
வாழ்க்கையும் உருக்குகிறது.. 487
அதிக முத்தங்களை
பெற்றுக் கொண்ட
அவ்விரவு
இரவை மீறிய
இன்னொரு இரவு... 488
தொலைத் தூரத்தில்
இருக்கும்
இரவின் முன்
உன்
இதயத் தொடுதல்
எத்தனை அழகு!
என்
இதயம் தொட்டுக்
கேட்கிறது
உன் காதல்
இரவு வேண்டுமா? என்று.. 489
இரவிலிருந்து
இமை மூடி
இன்னொரு இரவை
மீட்டெடுப்பதை போல தான்
உன் இதழிலிருந்து
என் இதழை மூடி
மீட்டெடுக்கிறேன்
இன்னும்
ஓர் முத்தத்தை.... 490
No comments:
Post a Comment