March 10, 2015

2015 கவிதைகள் 431 to 440

சீறும் நதிகளை போல
உன் நினைவுகள்
என்னுள் நகர்கிறது
நதியினை மீறி
முத்தமும் வழிகிறது..        431

மரங்களை காக்கும்
வனத்தை போல
வனத்தை மீறும்
அழகை போல
நீ தான்
எப்போதும் எனக்கு....       432

மலர்ந்த காதல்
வளர்கிறது
உலகத்தின் மறுமுனை நோக்கி..    433

யாராலும் வாசிக்கக்கூடிய
என் கவிதை
உன்னால் நேசிக்கப்
படுகிறது என் உயிரே!     434

கன மழை
பெய்யும் இவ்விரவில்
சிறுக சிறுக
உன் முத்தம்
சேர்க்கிறேன்
இரவின்
ஒளியை கடந்து....          435

புன்னகை புரியும்
கடவுளும் நீ
என்னை உன்னுள்
புதைய சொல்லும்
தேவதையும் நீ
உன்னிலிருந்து
மீண்டெலுந்த நான்
நானாக மாறும் போது
நாமாக இருப்பதே
மேல் என்று நினைக்கிறேன்.. 436

எதிலிருந்து மீள்கிறேன்
என்று தெரியவில்லை
இருந்தும் உள் நுழைகிறேன்
உன் காதலில்....          437

கனவுகள் கலந்த
காதலோடு என்
கலைமகளுக்காக
காத்திருக்கிறேன்
கலைமகள்
காத்திருக்கிறாள்
என் காதலுக்காக...       438

கவிதையில்
இருந்து விடுதலை பெற்று
எப்போது உன்னிடம்
தஞ்சம் அடைய
போகிறேன் என் கவிதையே.. 439

மிக அவசரமாய்
உன்னை தேடுகிறது
என் ஆத்மா
அதிகமாய்
உன் ஆழமான
முத்தத்தின் ஆரம்ப
நிலையை நினைத்து....    440

No comments:

Post a Comment