நீண்டகால இடைவெளிக்கு
பின்
நாம் சந்திக்கும் போது
எப்படியேனும்
நீ என் கண்களை
தான் காண போகிறாய்
இருந்தும்
அலங்கரித்து கொள்கிறேன்
என் கன்னங்களை
நீ முத்தமிட....... 501
சில கணங்களில்
முத்தத்தின்
அர்த்தம் அறிந்தே
சிரிக்கிறது
உன் நைட்டியின்
கருப்புப் பூக்கள்.... 502
வார்த்தைகளின் வழியே
பிறக்கும்
கவிதையில்
ஏனோ
கண்ணீரோடு
உன் காதலே பதிகிறது.. 503
என் முகத்தின்
சிரிப்பிற்கும்
என் சிந்தனையின்
சிறப்பிற்கும்
உன் பொறுப்பு
மிகுந்த முத்தமே
காரணம்.. 504
காதலின்
அழுகையினையும் மீறி
உன் காதலே
என்னை இன்னும்
வாழவும் சொல்கிறது
வாழவும் செய்கிறது... 505
இது இரவு
என்பதற்கு
அங்கீகாரம்
உன் முத்தம்
மட்டுமே எனக்கு... 506
இந்த அந்தி
நேர மழையினில்
கூட தொடரும்
ஓர் நிசப்தம்
உன் மெளன முத்தம்
நீ இல்லாது
நான் ரசிக்கும் போது கூட.. 507
அன்பே!
என் காதல்
உலகம் ஒரு நாளும்
உன் முத்தம்
இல்லாமல்
சுழல விரும்பவில்லை
இந்த உலகில்... 508
இதோ
வளர்ந்து நிற்கிறது
உன் காதல்
அந்த வானம் வரை
உன்னை வாரி
அனைத்துக் கொள்ள
ஏங்கித் தவிக்கிறது
இந்த வண்ணமற்ற
என் கண்கள்... 509
உனக்காக
நான் எழுதிக் கொண்டு
இருக்கிறேன் அன்பே!
இந்த தாலாட்டு பாடலை
நீ உறங்குவதற்கு அல்ல
உறங்காமல் என்னை
நீ அனைப்பதற்கு... 510
No comments:
Post a Comment