March 11, 2015

மறுத்தல்

மறுக்கப்பட்ட பின்
எந்தவொரு வேதனையும்
இல்லை என்றே
நினைக்கிறேன்

இருந்தும் இருக்கிறேன்
இரவின் வேதனையோடு

இன்று இரவு
தான் தெரிகிறது
இரவு என்பது
உலகத்தில் உள்ள
அனைவருக்கும் பொதுவானது
இல்லை என்று
நான் உறங்காத போது...

No comments:

Post a Comment