March 8, 2015

2015 கவிதைகள் 421 to 430

நித்திரை கனவும்
உன் காதலை
சுமக்கும்
சுகமென
உன் முகம் தேடி
ராத்திரையை கடக்கும்...    421

ராகமாக
என்னைத் தேடும்
கவிதை
நீ
ராத்திரியில்...   422

மழையில்
குளித்த தாமரை நீ
அதில் வழிந்தோடிய
நீர் நான்...                    423

நீர் நிரம்பிய
குளமும்
நிலை கொள்ள மறுக்கிறது
நிதானமாக
உன் பாதம் பட்ட பிறகு..   424

கோபுரங்களை போல
தான் உன் காதல்
கொட்டும் மழையினில்
கொளுத்தும் வெயிலினில்
இன்னும் வளர்ந்து
கொண்டு இருக்கிறது...   425

எல்லையற்ற அன்பு
உன் மீது நான் கொண்டும்
எல்லை மீறும்
யோசனைகள் துளி
அளவும் இல்லை
ஏன் என்றால்
என் மீதான
உன் எல்லையற்ற
ஓர் அன்பால்..               426

மரணம் தாண்டும்
என் கவிதைகள்
உன்னோடு
கை கோர்த்து இருப்பதால்.. 427

உன் சிரிப்போடு
வெட்கம் கலந்தால்
நான் என்
தூக்கமும் கலைவேன்...        428

உடைகளிட்டு
நீ உரசும் போது
உடையும் வெட்கத்தில்
உடையும் ஓர் முத்தம்...         429

கலை மிகுந்த
சிலை போல நீ
சிலையான பின்னும்
என்னை செதுக்க
சொல்லும் சிலையும் நீ
இதழின் வழி....                 430

No comments:

Post a Comment