March 3, 2015

2015 கவிதைகள் 401 to 410

நாளை நீ
புடவை கட்டும்போது
நான் உன்னைக்
கட்டிக் கொள்ள வேண்டும்
உன் காதோடு
புடவை பற்றி
ஒர் கவிதை பாட வேண்டும்..    401

நிகழ்கால நிஜங்களை
நினைக்கும் போதும்
கடக்கும் போதும்
நிம்மதி இல்லை
நீயே என்னோடு
இல்லாத போது
எனக்கென்ன
நிம்மதி ஓர் கேடு!!          402

காலத்தின் மீது
நம்பிக்கை வைத்து
நான் காணுவது
வெறுங் கற்பனைகள்
அல்ல
இக்கண்ணோடு
வடியும் என்
காதலின் எதிர்காலம்..      403

நீ அளிக்க
விரும்பும்
முத்தத்தாலும்
நான் அளித்த
முத்தத்தாலும்
இன்னும் அதிகமாய்
இருக்கிறது
உன் மீதான என் ப்ரியம்..  404

உன் முகத்தை
பார்த்து
பார்த்து
என் முகம்
இப்போது மறந்தது..       405

பெண் என்பது
உடல் சார்ந்தது
நீயோ
என் மனம்
சார்ந்தவள்...          406

முதிர்ச்சியடைந்த
உன் முத்தத்தால்
நானும் சிரிக்கிறேன்
முடிந்து அது
தொடர்ந்த பின்னும்...   407

யாருக்கும்
தென்படாத
உன் காதல்
தேன் போல
இன்னும் இனிக்கிறது
என் இதழில்...         408

முத்தமோ!
கண்ணீரோ!
இரண்டுமே,
நம் உணர்ச்சியின்
உச்சம் என் அன்பே!    409

மெளனம் நிறைந்த
எந்தவொரு
இடத்திலும்
காதலின் மோகமாய்
உன் முத்தம்...              410

No comments:

Post a Comment