March 2, 2015

2015 கவிதைகள் 381 to 390

பார்ப்பதில் தொடங்கி
தொடுவதிலும்
தொடர்கிறது உன்னைப்
பற்றி ஓர் கவிதை...       381

பரவசம் இல்லா
கனவு
இருந்தும் பரவசப்
படுகிறேன் அன்பே!!
இறுதியில் நீ வருவதால்..   382

நம் முத்தத்திற்கு
சாதகமான சாலையில்
அழகான ஓர்
நிலவு உன்னைப் போல..   383

எதார்த்த நிலையில்
இருந்து விலகி
இப்போது உன்னோடு
ஓர் காதல் கனவு
கண்டு கொண்டு இருக்கிறேன்.. 384

உறங்காத இவ்விரவிலும்
உயிர் பெறுகிறது
ஓர் கனவு
நீ கொடுத்த முத்தத்தால்..  385

ஆதவன் அரங்கேறும்
அழகிய இக் கடற்கரையில்
உன் அழகான காதலும்
அரங்கேறுகிறது நீ
இல்லாத போதும்...         386

ஒளியூட்டம் கதிரவனாய்
உன் காதல்
பொழிவூட்டுகிறது
எனக்கான உலகில்...       387

அசதியுற்று படுக்கையில்
நான் விழும் போது
கூட உன்னுடனான
ஓர் கனவு எழுகிறது
என் மனதில்...            388

என் பிரமை பிடித்த
கனவுகள் அனைத்தும்
மெய்யாய் போகிறது
மெய்யான
உன் காதல் மட்டும்
ஏன் இன்னும்
பிரமையாய் இருக்கிறது.. 389

பெண்களின் கூட்டத்தின்
நடுவில் நிற்கும் போது கூட
நான் உன் காதலின்
கூண்டுக்குள் நிற்பதாகவே
உணர்கிறேன்...             390

No comments:

Post a Comment