March 11, 2015

தன்னை அறிதல்

என்னைப் பற்றி
நான் அறிந்து
கொள்ள நீ
ஒரு காரணமாய்
இருக்கலாம்
காரணம் அற்ற
இவ்வாழ்க்கையில்
நான் அறிந்த
கொண்ட ஒரு
விசயம்
நான் எப்படியேனும்
இறந்து விடுவேன் என்று
இறப்பதற்கு எதற்கு
நீ வேண்டும் என்று
இப்போது யோசிக்கிறேன்
நீ வாழ பிறந்து
இருக்கிறாய் இவ்வுலகத்தில்
உனக்கென ஓர்
இடமும் உயிரும்
இல்லாமல் போய் விடுமா என்ன
நான் இவ்வுலகில்
இல்லாத போதும்...

No comments:

Post a Comment