March 11, 2015

2015 கவிதைகள் 441 to 450

இன்னும்
பெயரிடப் படாத
அந்த முத்தத்தின்
வழியே பிறக்கிறது
"காதல்"என்று
பெயரிடப்பட்ட
காதல்.....                    441

அடம்பிடித்து நீ
தரும்
அந்தி மழை முத்தம்
ஆருயிராய்
ஆனந்தம் தரும்
அன்மையில் நீ
தந்த முத்தம் போல...      442

இருள் நிறைந்த இரவு
இன்பமாக
உன் முத்தம்
இன்னும் ஒர்
உயிர் பிறக்கும்
காதலாக....           443

முத்தமிட்டு நீ
திரும்பும் போது
நானும் முத்தமிடுகிறேன்
நீ திரும்பிய
வழியை கடந்து...        444

இரவு நேர
இதயம் இயல்பாகவே
கேட்கிறது ஒர்
இயல்பான முத்தம்
உன்னிடம்
உன்னிடமிருந்து.......         445

உன் வீட்டில்
தடம் ஏதும் இல்லை
தடங்கள் இல்லா
உன் மென்
இதழ் முத்தத்தின்
நினைவுகளை தவிர...      446

நம் வாழ்க்கையின்
அனைத்து முத்தங்களை
வாங்கிய அந்த
வீட்டின் அறை
இன்னும்
சந்தோச தோணியில்
சிரித்துக் கொண்டு தான்
இருக்கிறது நம்மை தவிர..  447

விடுமுறை நாளில்
உலகம் சுற்றுவதாய்
நினைத்து
உன் இதழை சுற்றுகிறேன்.. 448

இரவின் நன்றிக்கு
பதில் அதே
இரவை உனக்கு
நன்றியாக
அளிக்கும் வரம்
மட்டும் வேண்டும்....       449

என் இந்நிமிட
தனிமையை சிதைக்க
உன் முத்தத்தின்
நினைவுகளே போதும்...    450

No comments:

Post a Comment