உம்மியிட்டு
தீயை பரப்பியவன்
உன்
உம்மாக்களையிட்டு
இவ்விரவை நிரப்புகிறேன்.. 461
சுடும்
என் இதழ்கள்
போதும்
உன் சுண்டு விரல்
அதை குளிர்விக்க.. 462
இருட்டை மீறி
வெளியேறும்
வெண்புகை இரவில்
உன் இதழோடு
என் இதழை
மாற்றி வெளியேறும்
நம் புன்னகை.... 463
தீயிலிருந்து
உடையும்
தீப்பொறி போல
உன்
தீண்டலில் இருந்து
உடைகிறது
ஒர் முத்தம்... 464
தென்னம் மட்டையில்
தேங்கிப் போன
நெருப்பின்
ஒளியில்
உன் கண்ணம் பட்ட
என் இதழ்களை
தொட்டுப் பார்க்கிறேன்... 465
அள்ளி வீசிய
உம்மிகளை
உற்றுப் பார்க்கிறேன்
நான் உன்னில்
கரைந்ததை போல
அது
நெருப்பில் கரைகிறது... 466
அடுப்பில்
சேர்ந்து போன
உம்மியை
கிளறிவிட்டு எரிப்பதை போல
உன் நினைவுகளை
உன் முத்தத்தால்
கிளறிவிட்டு
எரிக்கிறேன்... 467
மழைவிட்ட
அவ்விரவில்
விறகுகள் சேர்த்து
எரிக்கப்பட்ட போது
தீயின் கத கதப்பில்
வெளியேறிய வேர்வைகளை
துடைத்து விட
உன் விரல்
இல்லாதது தான்
என்னை அழ வைத்தது
விடியலை தாண்டியும்.. 468
மகளோடு
விளையாடும்
என் மகளோடு
நான் மடி சாய வேண்டும்
என் மகனைப் போல
ஓர் மகனாக
இதை
வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன்
அந்தி நேர
மழையிடம்...... 469
கொட்டும் மழையில்
உம்மியை மூடி
பாதுகாப்பதைப் போல தான்
கொளுத்தும்
வெயிலில்
என் இதழை மூடிக் கொள்கிறேன்
உனக்கு சுடமால் இருக்க... 470
No comments:
Post a Comment