காலை வேலையில் என்னை தட்டி எழுப்பியது, நான் மீண்டும் உறங்கினேன், மீண்டும் மீண்டும் தட்டி எழுப்பியது வேலைக்கு போ என. பதறியடித்தபடி எழுந்து பார்த்தால் Alarm -ஆக துடித்துக் கொண்டு இருக்கிறது நான் பதறியதை பார்த்து..
முகத்தை தடவியபடி கண்களை நன்கு திறந்து,திறந்தேன் குளியல் அறையை, எனக்கு முன்னரே யாரோ ஒருவர் குளித்தது போல ஒரு உணர்வு அவ்வளவு வெப்பமாக இருந்தது அந்த அறை. பின் நின்று யோரோ ஒருவர் பார்ப்பது போல ஒரு மன ஓட்டம். ஏன் இப்படி எனக்கு மட்டும்.
தூக்க கலக்கத்தோடு என் மனதின் ஓரம் சிறு கலக்கம் தான்.
உடையை உடுத்தியபடி உற்றுப் பார்த்தேன் கண்ணாடியை என்னை தவிர யாரும் தெரியவில்லை .
உடையை சரிசெய்து, அறையை உற்று நோக்கினேன் அப்போதும் ஏதும் தெரியவில்லை என் கண்களுக்கு.
நடந்து சென்றேன் நானே என்னை பின் தொடர்வது போல, பின் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே,
ரயிலுக்காக காத்திருக்கும் வேலையில் எனக்காக யாரோ காத்திருப்பது போல் ஒரு உணர்வு..
அந்த 2 நிமிட ரயில் பயணத்தில் நான் விழாமல் இருக்க அந்த கம்பியின் வழியாக என்னை இறுக்க பிடித்திருந்தது ஆவி அதை நிச்சயமாக உணர்ந்து என் மனது..
ஒரு விதத்தில் இது ஒரு நண்பனாக தான் இருக்கிறது. ஏன் என்றால் நான் எழுதிய கவிதைகளை நான் இல்லாத நேரம் படித்துப் பார்க்கிறது..நல்ல கவிதையின் வரிகள் இருக்கும் பக்கத்தை திறந்தே வைத்து எனக்கும் அடையாளம் காட்டுகிறது.
நானும் ஒரு நாள் ஆவியாக மாறும் ஒரு மனிதன் தான். அப்போதவது அதன் பெயரை எனக்கு அறிமுகப் படுத்தட்டும்..
-Sun Muga-
30-05-2013 02.19 AM