May 26, 2013

Subbu Raman

போதும் என்று நீ போகிறாய்
போதாது எங்களுக்கு
உன் உதவி...

சினம் நீ கொண்டாலும்
அது உன் வேலையின்
விசுவாசத்தை தான்
காட்டுகிறது எனக்கு..

அதை எத்தனை பேர்
உணர்ந்து இருப்பார்கள்
என்று எனக்கு தெரியாது..

எத்தனை என்னில் அடங்க
முன்னேற்றம் உன் தயவால்..

தடுமாற்றம் இல்லாத ஒரு
நேர்முக மனிதனை
உன்னில் தான்
நான் கண்டேன்..

நீயும் நல்ல மனிதன்
தான் உன்னை பற்றி
முழுதும் அறிந்த மனிதனுக்கு,

நாளைய பற்றிய சிந்தனை
உனக்கு மட்டும்
உயர்ந்து இருக்கிறது,

உன்மீது என் நேசமும்
வளர்ந்து கொண்டே தான்
இருக்கிறது..

அச்சமில்லை உன்னோடு
பேசுவதற்கு கூச்சம்
தான் குடியிருக்கிறது..

உன் அறிவை எண்ணி எண்ணி ..

எத்தனை காலம் என்று
விடிய விடிய நீ
கணக்கு போட
தேவையில்லை, என்
உயிர் உள்ள வரை
உன்னை நினைத்து
கொண்டே தான் இருப்பேன்...

உழைப்பையே உன்
உதிரமாக கொண்டு
நீ ஒடுகிறாய்..

அதற்க்கும் கொஞ்சம் ஒய்வு
தேவை தான் புரிகிறது..

புண்ணியம் பல நான் புரிந்து
இருக்க வேண்டுமோ
உன் அருகே வேலை
செய்ய....

வேரின் உயிர் போக மரத்தின் கண்ணீரில் உருவான காகிதமும் கண்ணீரால் நிரம்புகிறது...

உன் பிரிவை எண்ணி ...

-§un Muga-
28-05-2013 21.25 PM

No comments:

Post a Comment