May 19, 2013

விநாயகம்

அதிகம் தெரியாத மனிதன்.
இந்த மண்ணில் இல்லை.
ஏனோ ஒரு சோகம்

ஏன் இவன் மீது அப்படி
ஒரு பாசம் அந்த இறைவனுக்கு,
அவனோடு பழகியவருக்கு கூட
இல்லாத அன்பு...

மிக சுறுசுறுப்பானவன்
என்பதால் சுத்தமாக
இல்லாமல் போய்விட்டான்
போல...

உன் உயிர் இல்லை
என்றாலும் உன்
உணர்வு என்னையே
சுற்றி சரண் அடைகிறது..

விபத்து - யார் காரணம்
விடியும் போதே..
உன் உயிரை எடுக்கவா
அந்த விடியல்
விடிந்தது..

செயல் இழந்த பாகம்
உன் பாவ கணக்கின்
கூட்டல் கழித்தல் போல..

உணர்வே இல்லாத உறுப்பு
உறுகொலைய வைத்தது..

நெறுப்புக்கு இறையாகும்
போது  நீ
கண் திறந்து
பார்த்தாய் ஒவ்வொரு
மனிதனையும் அந்த
மாயானத்தில்...

மாயானத்தில் நான்
ஒரு மனிதனாக
கூட இல்லை..

ஒரு துளியும் வடிந்தாக
கூட நினைவும் இல்லை..
மனதில் இது ஒரு
இறக்கமா?
இல்லை இறுக்கமா?

நீ படுத்திருந்த ஆஸ்பத்திரியை
காணும் போது,
அது ஆஸ்பத்திரியே இல்லை
உன் நினைவின்
ஒரு கூடாரம்...

உன் உபசரிப்பின்
ஒரு கூடாரம்...

உன் நினைவோடு வாழும்
ஒரு சாதாரண மனிதன்
நான்...

(இவர் என்னோடு பணியாற்றிய
மனிதர்)
Sun Muga
19-05-2013 01.57 AM

No comments:

Post a Comment