May 13, 2013

ஆயத்தம் ஆகு

ஆயத்தம் ஆகு என் காதலியே
என்னை காதலிக்க,
வெகு நாட்கள் என்னை
பார்த்து ரசித்தது போதும்,
ஆயத்தம் ஆகு..

உன் அழகிற்கு குளியல்
வேண்டாம்,
நேரம் ஆகிறது,
வா ஒரு காதல்
கதை சொல்ல,

உன் கண்களுக்கு மை
தீட்ட வேண்டாம்,
நேரம் ஆகிறது
வா ஒரு காதல்
வசனம் பேச..

உன் கைகளுக்கு வளையல்
போட வேண்டாம்,
நேரம் ஆகிறது
வா ஒரு காதல்
பிண்ணனி இசை அமைக்க ..

உன் கை விரலுக்கும்
அழகு கூட்ட தேவையில்லை
நேரம் ஆகிறது
வா ஒரு திரைக்கதை
அமைக்க....

உன் விழிகளை மூடு
நிலவு ஒளிப்பதிவு
செய்யட்டும்..

உன் உதடுகளை
திற அவை ஒலிப்பதிவு
செய்யட்டும்..

ஆயக்கலைகள் கலை
அமைக்கட்டும்..

கொஞ்சும் கொலுசு ஒலி
நடனம் அமைக்கட்டும்..

மிஞ்சும் நம் காதல்
நம்மில் இயக்கட்டும்..

நம் காதலை கனவுகள்
தயாரிக்கட்டும்...

-SunMuga-

13-05-2013 00.35 AM

No comments:

Post a Comment