May 17, 2013

கருவறை

ஆண் மகன் நான்.

எனக்கும் கருவறை
கொடுத்தது உன் கருவிழி..

ஊடல் இல்லை,
தேடலால் உருவான
கரு இது..

வளர்கிறது, ஆம் வளர்கிறது,
இதயம் வீங்க,

ஒவ்வொரு நாளும் உன்
நினைவை உண்டு...

ஒவ்வொரு நாளும் உன்
விழியை உண்டு...

ஒவ்வொரு நாளும் உன்
அன்பை உண்டு...

என் கருவறைக்கும்
காவல் இருப்பது
உன் காதல்...

எட்டி உதைக்கும் பிள்ளை
உன்னை தேடியே...

கட்டி அனைத்த
கரம் தேடியே..

முட்டி மோதிய
நெஞ்சம் தேடியே...

கோர்த்து கொண்ட
இதழ் தேடியே...

சேர்த்துக் கொண்ட
நினைவை தேடியே...

ஆனாலும் வளர்கிறது
இந்த கருவறை...

உன் கை விரல் பட்டால்
சுக பிரசவம்...

இல்லை என்றால்
சிசேரியன் தான்..

வலி உயிரை கொல்லும்
தடம் என்னை கொல்லும்

நரம்பால் திரித்து உடம்பால்
வெறுத்து உயிரே போய்விடலாம்
போல நொடி போகும்...

நான் மட்டும் உன் காதலை
இல்லை நம் காதல்
குழந்தையை பார்த்து
கண்ணீர் விடுவேன்..

நான் வளர்த்துக் கொள்வேன்
நானே வளர்த்துக் கொள்வேன்
காதலை...

கண்ணீரை சுரப்பேன்
முலைப்பாலிற்க்கு பதில்..

தட்டிக் கொடுப்பேன்
உன் கை விரல் போல...

தொட்டில் ஆட்டுவேன்
நம் சந்தோஷம் போல...

தாலாட்டு பாடுவேன்
உன் குரலை போல...

குளிக்க ஊத்துவேன்
உன் உரசல் போல...

நானே பார்த்துக் கொள்கிறேன்..

வளர வளர வளரட்டும்
நம் காதல் போல...

-Sun Muga-
17-05-2013 22.41 PM

No comments:

Post a Comment