நிலவே நீயும் ஒரு
பெண் தானோ?
என்னவளை போல,
என்னை கண்ட நாட்களில்
வளர்கிறாய்,
என்னை காணாத நாட்களில்
தேய்கிறாய்,
நீயும் ஒரு நிலவு
என்று அறிந்தேன்
பெண்ணே..
முத்தமிட நான்
எத்தனிக்கும் போது...
நிலவே நீயும் ஒரு
பெண் தானோ?
உன்னையே சுற்றி
எத்தனை ஆண்
நட்சத்திரம்..
நானும் ஒரு ஓரமாக
தான் ரசிக்கிறேன்
நீ என்னை ஒர
கண்ணால் ரசிக்கும்
போது...
நீயும் நிலவு தானோ?
பெண்ணே..
இந்த சூரியனையே
உன்னுள் மூடிக்
கொள்கிறாயே?
நிலவே நீயும் ஒரு
பெண் தானோ?
நித்தம் இல்லை,
ஆனாலும் ஒரு அமைதி,
உன் பிறப்பிடம் அறியாது,
எனக்கு தெரியும்
உன் இருப்பிடம் ...
பெண்னே நீயும் நிலவு
தானோ?
காணாமல் போனாலும்
நித்தம் வளர்கிறாய்,
என் இதயத்தில்...
என்னை பொறுத்தவரை
நீயும் நிலவும் ஒன்று...
-Sun Muga-
23-05-2013 23.35 PM
No comments:
Post a Comment