முதல் வரி உன்
இதழை பற்றி ...
வேர் இல்லாமல்
இந்த பூ மட்டும்
எப்படி பூத்திருக்கிறது,
தினமும் அதிலும்
வாடாமல்...
உன் இதழை
பார்த்தே,
நான் வாடி போனேன்
வாடி என் பெண்ணே,
கண்ணால் ஒரு
முத்தம் தர..
நித்தம் ஒரு முத்தம்
போதும்,
நிரந்தரமான வாழ்க்கையில்
நிம்மதி கூட...
நீண்ட இரவும்,
சுருண்ட பகலும்
உன் முத்தத்திற்கே
சொந்தம்...
பந்தம் ஒன்று உறுவாக
முத்ததில் பந்தாட
வா என் கண்ணே!!!
காத்திருக்கிறேன் பூத்திருக்கும்
உன் இதழை கவ்வ...
என்னை காத்திருக்க விட
மாட்டாய் என்று
தெரியும் -இருந்தும்
காத்திருக்கிறேன்
உன் முத்தத்தின்
சுவை அதிகரிக்க. .
நேசத்தின் பலன்
உன் முத்தம்..
நேசித்தலின் பலம்
உன் முத்தம்..
என் வாசத்தின் உயிர்
உன் முத்தம்..
ஏற்ற தாழ்வு உன்
நெஞ்சில் முத்தமிடும்
போது வட்டமிடும்
அழகு, அழகு தான்...
நிறைவு பெறும் போதும்
தொடங்குகிறது
உன் முத்தம்...
-Sun Muga-
23-05-2013 23.51 PM
No comments:
Post a Comment