May 30, 2013

விழி(தை)

என் விழி தான்
உன் காதலின் விதை,

அதில் முளைத்த
கிளைகள் தான்
உன் அன்பு,
உன் பாசம்,
உன் நேசம்..

இந்த விதையால்
மட்டும் தான்
தன் காதல் விதையவே
பூவாக பூக்க
வைக்க முடியும்..

வேர்வை சிந்தி எனக்காக
இரவு பொழுதை
கழித்து. .

காலை வேலையில்
புன்னகையை உரமாக
உண்டு.. உயிர் வாழ்கிறது.

உன்னதமான படைப்பு
உணர்ச்சி கொண்ட துடிப்பு,
உதிரமாக நினைவுகள்
என பல,

நித்தம் ஒரு நேரம்
என இல்லாமல்,
நித்தமும் நிலை குலைய
வைக்கிறது உன் காதல்..

-Sun Muga-
30-05-2013 01.20 AM

No comments:

Post a Comment