முத்தம் என்றால் நம்
முதல் முத்தம் தான்
நினைவுக்கு வருகிறது..
நடுங்கிய கைகளோடு
நெருங்கிய இதழ்...
இருள் இல்லை,
ஒரு சேர
இமை மூடி வர
வைத்தோம் அந்த
இருளை,
உளறிய உதடோடு
உரசிய உடலால்
எங்கு போனோம்
என்று நமக்கு
தெரியவில்லை,
யாரோ ஒருவரின்
வருகையால்
வந்த அமர்ந்த
அறைகளில்
அலைந்து திரிந்த
அந்த மூச்சுக்
காற்றின் ஈரம்
இன்னும் ஈரமாக
கண்களில்...
அழியாத ஓவியம்
அந்த நிழலில்
ஒரு சேர நாம்
நின்று வரைந்தது
வண்ணங்கள் இல்லை,
கண்கள் இல்லாதவர்கள்
போல் தான்
நாமே ஊகித்து
இது தான் முத்தம்
என்று முத்தமிட்டுக்
கொண்டோம்..
இது உனக்காக நான் என்றோ
எழுதியது..
உன் இடையை தொட்ட
என் இதழ்களும் மெய்
மறந்தது எங்கே
இருக்கிறோம் என்று.
உன் இதழ் பட்டவுடன்
தான் உணர்ந்தது
ஓ!! இங்கே தான்
இருக்கிறமோ என்று.
நம் பேச்சுக்கு இடை
இடையே முத்தமிட்டுக்
கொண்டது போல்
ஒரு கணவு.
இப்போது நினைவில் கனவுக்கு
இருவரும் முத்தம்மிட்டுக் கொண்டே இருக்கிறோம்..
-Sun Muga-
22-08-2013 22.36 PM
No comments:
Post a Comment