இந்த உலகில் நான் பிறந்ததும் என் இறப்பை நோக்கி என் பயணம் தொடங்கிவிட்டது என்று நான் அறிய இத்தனை காலம் ஆகிவிட்டது. ஆனாலும் இனியும் தாமதிக்காமல் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என என் காலத்தை கழிக்கிறேன். என்ன செய்வது என்று தான் இந்நாள் வரை தெரியவில்லை. நமக்கு தெரிந்த ஒரே வேலை இப்போதைக்கு கவிதை எழுதுவது மட்டும் தான்.
ஆனால் கவிதை எழுத தொடங்கியவுடன் உன்னை பற்றியே எழுத்துக்கள் அமைகின்றன.
இது நான் உன் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்துகிறதா? இல்லை நீ என் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்துகிறதா?என்று கூட எனக்கு தெரியவில்லை.
இறுதியாக நான் எடுத்த முடிவு தான் நம் இறப்பிற்க்குள் ஒரு கவிதையாவது உன்னை பற்றி எழுத வேண்டும் என்று.
அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், என் காதலை பற்றியோ - உன் காதலை பற்றியோ..
காத்திருக்கிறது காகிதம்,
என்னை போல்,
உன்னை போல்,
கவிதை அமைய...
இது தான் நிஜம். நீ ஒரு கவிதை என்று சொன்னால் அது பொய்.
ஆம், நீ ஒரு கவிதை ஆறு.
இந்த கவிதை ஆறும் என்றோ
ஒருநாள் இல்லை,
இன்றும் இந்த அன்புக்
கடலில் கலந்து கொண்டே
தான் இருக்கிறது.
அலையாக உன் நினைவுகளும்
தாவித் தாவி தான் செல்கிறது,
கரை சேரும் நாளை எண்ணி.
தனிமையில் என்னோடு
தள்ளாடுகிறாய் என் அன்பை
சமாளிக்க முடியாமல்.
நான் என்ன செய்வேன் ,
நான் உனக்காக படைக்கப்
பட்டவன் என்று உணர்ந்துவிட்டாதால்..
-Sun Muga-
25-05-2013 22.58 PM
No comments:
Post a Comment