May 2, 2013

காதல்?

முகமென பார்த்தால் மலராது காதல்,

அகமென நுகர்ந்தால் நுழைவது காதல்,

எது என்று அறியாது காதல்,

பருவம் படராமல் வருவது காதல்,

கண்ணிலே நுழைவது காதல்,

என்னிலே பதிந்தது அந்த காதல்...

இமைபட்டால் இனிமையான காதல்,

இதழ் பட்டால் இதமான காதல்,

அது என்னவள் காதல்...

வெற்றியின் போது தோழ் சாய்வது காதல்,

தோல்வியை மறக்க வைப்பது காதல்,

தோற்றத்தை மாற்றி வைப்பதும் காதல்,

தோட்டமாக மனம் மாறுவதும் காதல்,

இன்பம் தருவதும் காதல்,

தூய்மையான கண்ணீர் துளிகள் தருவதும் காதல்,

மனதை தொலைத்து விட்டாலும் காதல் ,

மனம் திருடுபோனாலும் காதல்,

மூளையை செயல் இழக்க செய்வதும் காதல்,

மூளையை வேலை செய்ய வைப்பதும் காதல்,

உன்னதமான அன்பே காதல்,

உண்ணுவதையே உணரமால் வைப்பதும் காதல்,

பிஞ்சுலையும் நெஞ்சிலே வளரும் காதல் வஞ்சம் இல்லா காதல்,

உடல் பஞ்சத்தில் இறந்தாலும் உள்ளத்தில் வாழ்வது உயர்ந்த காதல்,

என்னோடு நீ இருப்பதும் காதல்,

உன் கண்ணோடு நான் வாழ்வதும் காதல்,

-Sun Muga-
02-05-2013 00.36 AM

No comments:

Post a Comment