உதிராமல் என்னுள்
உதயம் ஆனாய்..
என் உலகம் நீ என்று ஆனாய்..
எந்நிலையில் உன்னை
கண்டேன்?
அந்நிலையில் என்னை
கண்டேன்..
இந்நிலையில் என்னை
காணோம்.
பரித்த அன்பை பதறமால்
பாதுகாக்கிறாய்..
வெந்நீரில் வெந்தாலும்
உதிராது உன் காதல்...
வெறுத்த காலமும் உண்டு
நீ என்னோடு இல்லாத
காலத்தை...
வெற்று காகிதம்
நிரம்புகிறது
உன் நினைவால்..
என் வேதனையை
குறைக்க...
ஏன் என்று கேட்க்கிறாய்
மெளனம்..
அதற்க்கு பதிலும்
காலத்தின் மெளனமே...
-§un Muga-
26-05-2013 21.45 PM
No comments:
Post a Comment