வார்த்தைகளும் வாடிக்
கிடக்கிறது -என்
காதல் பூவே,
நொடி பொழுதில்
உன் உயிரை
துறக்க எண்ணினாய்,
வா(ழ)டப் பிடிக்காத
பூ தன் வேரை
தானே அறுத்து
தன் தலையை
துண்டிக்க எண்ணுவது
போல,
உன் வாசமும், என்
மீதான நேசமும்
உண்மை.
என்னிடமும் உன்னிடமும்
இருப்பது வெறும்
காதல் என்ற
வண்ணம்...
பல நுண்ணுயிர்கள்
வாழ - நீ வாழ,
நிலை குலைந்துப் போன
கனவு என,
நிறம் மாறிப் போன கனவும்
கனவு தான்,
நினைவுகளால் நினைத்து
நிம்மதி இல்லாமல்
நீயும் என்னை காதலிக்கிறாய்..
உன் காதலின் அர்த்தம்
இந்த மண்ணுக்கு
மட்டும் புரிந்த புதிர். .
புதை குழியில் புதைந்தாலும்
இந்த மண் தான்
உன்னை அனைத்துக்
கொள்ளும் நீ கலங்காதே!!
கனநேரம் ஆனாலும்
கனமான காதல்
உன் காதல்,
என்னால் தூக்கி
சுமக்க முடியாத
அளவிற்க்கு
கனத்துப் போய்விட்டது
அது...
-Sun Muga-
30-05-2013 00.47 AM
No comments:
Post a Comment